போராட்டங்கள் வலுத்த நிலையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு!
டெல்லி: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, சமீபத்தில் சபரிமலை தொடர்பான வழக்கில் செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும், சபரிமலையில் வழிபட அனுமதி உண்டு என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, சபரிமலை பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர், ஷியாலஜா விஜயன், சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இப்போது சபரிமலை நடை திறப்புக்கு பிறகு போராட்டங்கள் இன்னும் வலுக்கும் நிலையில், கேரளா பிராமணர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள வழக்கில் பிரதிவாதியாக இல்லாத ஒரு புதிய அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருப்பதால், இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா என்பது சந்தேகம். ஒருவேளை விசாரித்தாலும், ஓபன் கோர்ட்டில் வைத்து விசாரித்துவிட்டு அப்படியே நகரவே வாய்ப்புள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
தேவசம் போர்டு, கேரள அரசு போன்ற வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்பினர், தாங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications