டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs - Global Capability Centres), கடந்த சில ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த மாஸ் ஹையரிங் (Mass Hiring) முறையை 2026ஆம் ஆண்டில் முற்றிலுமாக கைவிட்டுள்ளன. ஒருப்பக்கம் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை பணிநீக்கம், ஊழியர்கள் குறைப்பு, குறைவான சம்பள உயர்வு, வேரியபிள் பே தொகை குறைப்பு என பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் ஐடி ஊழியர்களுக்கு பணிமாற்றம் செய்ய இருந்த ஒரே நம்பிக்கை, ஜிசிசி நிறுவனங்கள் மட்டுமே.

ஆனால் தற்போது ஜிசிசி-க்கள் Mass Hiring முறையை கைவிட்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, குறிப்பிட்ட தனித்துவமான திறமைகளைக் கொண்ட வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமே தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2-3 ஆண்டுகளாக நிறுவனங்கள் தங்களின் டெக் அணிகளை அசுர வேகத்தில் விரிவுபடுத்தி வந்த நிலையில், தற்போது இந்த புதிய தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக ஊழியர்களின் சேர்க்கை முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

IT TCS Jobs Tcs Infosys gcc hiring india 2026 mass hiring stopped in gcc ai jobs in gcc india cloud cybersecurity jobs gcc gcc recruitment trends 2026 tech hiring slowdown india mid senior level jobs gcc product development jobs india platform engineering jobs gcc india gcc hiring drop 2026

நௌக்ரி நிறுவனத்தின் ரிப்போர்ட்

இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்புத் தளமான நௌக்ரி.காம் (Naukri.com) நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்போ எட்ஜ் (Info Edge), அண்மையில் வெளியிட்டுள்ள வேலை தேடுபவர்கள் குறித்த அறிக்கையில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் இருக்கும் உலகளாவிய திறன் மையங்களின் (GCC) ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு நியமனங்கள் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன. இது தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏஐ (AI) கொடுத்த அழுத்தம்

இந்த அதிரடி வேலைவாய்ப்புச் சரிவு குறித்து இன்போ எட்ஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (MD & CEO) ஹிதேஷ் ஒபராய், நிறுவனத்தின் நான்காம் காலாண்டு (Q4FY26) வருவாய் கூட்டத்தில் முக்கிய விளக்கமளித்துள்ளார். தற்போதைய சூழலில் சிறிய அளவிலான GCCs தொடர்ந்து புதிய ஊழியர்களைத் தேர்வு செய்து வந்தாலும், சந்தையில் உள்ள சில மிகப்பெரிய நிறுவனங்கள் கடந்த சில காலாண்டுகளாகத் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தற்போது பணியில் இருக்கும் அணிகளின் உற்பத்தித் திறனை (Productivity) பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தமே இந்த ஊழியர்கள் சேர்ப்பில் ஏற்பட்டுள்ள குறைப்பிற்கு முதன்மைக் காரணமாகும்.

மிட் மற்றும் சீனியர் லெவலுக்குக் டிமாண்ட்

இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தால் தற்போது பிரஷ்ஷர்களை விட, நடுத்தர மற்றும் மூத்த நிலை (Mid to Senior level) டெக் நிபுணர்களுக்கான சந்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக 4 முதல் 12 ஆண்டுகள் வரை ஐடி துறையில் வேலை அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

ஏஎன்எஸ்ஆர் (ANSR) மற்றும் என்எல்பி சர்வீசஸ் (NLB Services) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஜிசிசி நிறுவனங்களில் தற்போது புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்களில் சுமார் 55 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இந்த அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 முக்கியத் தொழில்நுட்பங்கள்

இன்றைய டிஜிட்டல் பொருளாதாரச் சூழலில், உலகளாவிய திறன் மையங்கள் தங்களின் நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக விரிவாக்கம் செய்வதை நிறுத்திவிட்டு, குறிப்பிட்ட 5 முக்கியத் பிரிவுகளில் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே (Specialised talent) தற்போது முழு முன்னுரிமை வழங்கி வருகின்றன.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud), சைபர் செக்யூரிட்டி (Cybersecurity), பிளாட்பார்ம் இன்ஜினியரிங் (Platform engineering) மற்றும் தயாரிப்பு மேம்பாடு (Product development) ஆகிய ஐந்து முக்கியத் தொழில்நுட்பப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்குச் சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+