2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே
Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் கும்ப ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். 5 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு வருகிறார். இதுவரை குரு பகவான் உங்கள் ராசி 2, 11க்கு உரியவர். 6 ஆம் இடத்தில் குரு பகவான் வருவது உங்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் முதுகு, வயிறு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முகம் சார்ந்த உறுப்புகளில் கவனம் தேவை.
முன்னேற்றம்
எதிரிகள் விஷயத்தில் தேவையில்லாத வம்புகளை விலை கொடுத்து வாங்காமல் இருப்பது நல்லது. எதிரிகளைப் பற்றி வெளியில் பேசுவது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல விதமான ஏற்றங்கள் ஏற்படும். அரசு கெளரவம் ஏற்படும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி ஏற்படும். எல்லா விதமான படிப்புகளிலும் ஏற்றம் ஏற்படும். வெளிநாடு வேலைக்குச் செல்லும் யோகம் ஏற்படும்.
புதிய பொறுப்பு
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு வேலை மற்றும் தனியார் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாப வாய்ப்புகள் உருவாகும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு கிடைக்கும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன்-மனைவி இடையிலான புரிதல் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
வெற்றி வாய்ப்புகள்
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் கிடைக்கலாம். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மன அழுத்தம் குறையும். உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது நல்ல பலனை தரும். இழந்த பெருமைகளை பெறக்கூடிய அமைப்பு ஏற்படும்.
வழிபாடு
கோவிந்தா என்கிற நாமத்தை சொல்வது நன்மையைத் தரும். சிறிய உடல்நல பாதிப்புகளுக்கும் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நன்மையைத் தரும். வழக்குகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களை நம்புவதைத் தவிர்ப்பது நல்லது. பெருமாள் தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மேல் திருமலையில் தரிசனம் செய்வது ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தித் தரும்.
-
7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது












Click it and Unblock the Notifications