தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்
சென்னை: சி.வி.சண்முகம் உள்பட 2 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைகிறார்கள் என முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருந்தார். சண்முகம் பெயரை சொன்ன அவர் மற்றொருவர் பெயரை சொல்ல மறுத்துவிட்டார்.
பனையூர் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், அதிமுகவில் இருந்தேன், அங்கிருந்து ஓபிஎஸ்ஸுடன் பயணித்தேன். ஓபிஎஸ் திமுகவில் இணைந்த பிறகு, நான் அதிமுகவில் இணைந்தேன். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பதை ஆராய எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. அதனால் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன்.
தவெகவுக்கு மேலும் இரு எம்எல்ஏக்கள் இணைகிறார்கள். அவர்களில் ஒருவர் சி.வி.சண்முகம், இன்னொருவர் யார் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன் என்றார். அந்த இன்னொருவர் விஜயபாஸ்கரா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
மேலும் நடராஜன் தொடர்கையில், அதிமுகவில் இருந்து நிறைய பேர் அலைஅலையாக தவெகவில் இணைவார்கள். தவெகதான் உண்மையான அதிமுக என்ற நிலை வரும் என தெரிவித்திருந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டசபை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததே அவரது இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வின் புதிய நகர்வுகளும் சண்முகத்தின் நிலையும்
சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து பிளவுபட்டிருந்த அ.தி.மு.க., நேற்று எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி இடையே நடந்த சந்திப்பிற்குப் பிறகு மீண்டும் ஒருங்கிணைந்தது. இந்த புதிய அரசியல் நகர்வால் சி.வி.சண்முகம் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு, தனித்துவிடப்பட்டதாகத் தெரிகிறது.
தீவிர ஆலோசனையில் ஆதரவாளர்கள்
தனித்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் 18 ஒன்றிய செயலாளர்கள், 3 நகர செயலாளர்கள், 4 பேரூர் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
விவாதப் பொருள்: கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியிலேயே இணைவதா அல்லது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைவதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
மறுபுறம், விழுப்புரம் மாவட்ட அரசியல் களம் சூடேறியுள்ளது. மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகிகள், சி.வி.சண்முகத்தை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஒருவேளை அவரை மீண்டும் சேர்த்தால், தாங்கள் கட்சியை விட்டு வெளியேறுவோம் என்றும் அவர்கள் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அதிமுகவில் பிரச்சினை என்பது இன்னும் ஓயாத நிலையிலேயே இருக்கிறது.
-
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!












Click it and Unblock the Notifications