இந்திய அணிக்கான கேப்டன் ரேஸ்.. ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா முந்தும் சஞ்சு சாம்சன்.. பிசிசிஐ முடிவு?
மும்பை: சீனாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு, நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனின் பெயர் முதன்மையாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய சீனியர் வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பை மற்றும் முதன்மைத் தொடர்களில் கவனம் செலுத்தவுள்ளதால், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இளம் வீரர்களைக் கொண்ட இரண்டாவது தர இந்திய அணி அனுப்பப்பட உள்ளது. இந்த அணியை வழிநடத்தும் ரேசில் சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இருப்பினும், இவர்களில் சஞ்சு சாம்சன் ரேஸில் முந்துவதாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நீண்ட காலமாக மிகச் சிறப்பாக வழிநடத்திய அனுபவம் சஞ்சு சாம்சனுக்கு சாதகமாக உள்ளது. இளம் வீரர்களைக் கையாள்வதிலும், இக்கட்டான சூழலில் நிதானமாக முடிவெடுப்பதிலும் அவர் திறமையானவர் என்பதால் தேர்வுக்குழுவின் முதல் சாய்ஸாக அவர் உள்ளார்.
ரேசில் இருக்கும் திலக் வர்மாவை விட சஞ்சு சாம்சன் சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் கொண்டவர். மேலும், காயத்தில் இருந்து மீண்டு வந்து ஃபார்முக்குத் திரும்பப் போராடி வரும் ஸ்ரேயாஸ் ஐயரை விட, தற்போதைய டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று தர பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.
இதனிடையே ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய உத்தேச அணியில் இளம் வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல், ஆயுஷ் பதோனி, யாஷ் தாகூர், விப்ராஜ் நிகம், ஷாபாஸ் அஹ்மத், அனுகுல் ராய், ஹர்ஷ் துபே உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த முறை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி ஆசியக் கோப்பையைல் தங்கம் வென்று அசத்தியது. இம்முறை ஜூனியர் வீரர்களே அனுப்பப்படுவார்கள் என்பதால், இவர்களில் ஒருவருக்கே கேப்டன்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ரேஸில் முந்தும் வீரர்கள், இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டனாகவும் வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications