திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை
சென்னை: தமிழகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்படும் நிலையில் விழா மேடையில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் போட்டோ இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
'உலக பொதுமறை' என அழைக்கப்படும் திருக்குறளை நமக்கு தந்தவர் திருவள்ளுவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளுவரை மையப்படுத்தி சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம் திருவள்ளுவரின் உடை தான். தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட திருவள்ளுவரின் போட்டோவில் அவர் வெள்ளை நிற உடை அணிந்திருப்பார். ஒரு கையில் எழுத்தாணி, இன்னொரு கையில் ஓலைச்சுவடி வைத்திருப்பார்.
ஆனால் சமீபகாலமாக திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் திருவள்ளுவருக்கு காவி உடையில் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி வருவது சர்ச்சையை கிளப்பியது.
திருவள்ளுவருக்கு சாதி, மதம், மொழி போன்ற எந்தவொரு குறுகிய அடையாளமும் கிடையாது. இதனால் காவி உடை அணிவதை ஏற்காமல் திமுக உள்பட பிற கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் இன்று மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இனு்று திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.
இதற்கான விழா மேடையில் திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் போட்டோ வைக்கப்பட்டுள்ளது. அந்த போட்டோவில் திருவள்ளுவர் காவி உடை மட்டுமின்றி நெற்றி நிறைய திருநீறு பூசியுள்ளார். கழுத்தில் ருத்ரசாட்ச மாலை அணிவித்துள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் போட்டோ பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஆளுநராக இருந்த ஆர்என் ரவி இதுபோன்ற போட்டோக்களை பயன்படுத்தி அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார்.
தற்போது ஆர்என் ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு பதில் கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்படியான சூழலில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்கும் திருவள்ளுவர் திருநாள் விழாவிலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications