டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் தங்களது அடுத்தகட்ட திட்டங்களை மிகக் கவனமாக வகுத்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவுக்குள் மீண்டும் அதிகாரப் போட்டி தலைதூக்கியுள்ளதாகவும், அதிமுக தலைமையை கைப்பற்றும் நோக்கில் அமித் ஷாவிடம் டிடிவி தினகரன் டீல் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி, கட்சி பிளவு, பின்னர் நடந்த சமரசம் ஆகியவை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்தவர்கள் கட்சிக்குள் இணைந்திருந்தாலும், அதிருப்தி இன்னும் நீடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பாக தகவல்கள் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளன. என்டிஏ மீண்டும் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ள தினகரன், தற்போது மிகப்பெரிய டார்கெட்டை நெருங்கியுளார்.
தமிழக வெற்றிக் கழகம்
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்தது. அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கட்சிக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்தன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். சிலர் அமைதியாக காத்திருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
இந்த சூழலில் அதிமுகவை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டங்கள், நிர்வாகிகள் சந்திப்பு, அமைப்பு ரீதியான மாற்றங்கள் போன்றவற்றில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஜூன் 10ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் தமிழக அரசியலில் பல கேள்விகளை எழுப்பியது.
டிடிவி தினகரன்
அந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக மூத்த தலைவர் தம்பிதுரை கலந்து கொண்டார். அதே நேரத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். இதன்மூலம் பாஜக கூட்டணியில் மீண்டும் அவருக்கு முக்கியத்துவம் வழங்க பாஜக தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. தேசிய ஜனநாயக கூட்டணியில் அவருடைய பங்கு அதிகரித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக
பாஜக தேசிய தலைமை கடந்த சில ஆண்டுகளாக அதிமுக மற்றும் அமமுக இடையிலான இடைவெளியை குறைக்க முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முயற்சிகள் முழுமையாக பலன் அளிக்கவில்லை. அதிமுக தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்த பிறகு, கட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு யூகங்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன. அந்த வகையில், அதிமுகவை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பம் டிடிவி தினகரனுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி
கட்சிக்குள் இருந்து வெளியேறிய நிர்வாகிகள், அதிருப்தியில் உள்ள முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சில மாவட்ட அளவிலான தலைவர்களுடன் தினகரன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைத்து வலுவான எதிர்க்கட்சியாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தேசிய அளவிலான சில முக்கிய தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அமித் ஷா
டெல்லி வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின்படி, விரைவில் தமிழகம் வர உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து டிடிவி தினகரன் விரிவாக எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் தலைமையை மற்றுவது தொடர்பாகவும் அவர் தனது கருத்துகளை முன்வைக்கக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
மிகப்பெரிய சவால்
அதேநேரத்தில், இந்த தகவல்கள் அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சிக்குள் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், டிடிவி தினகரன் தொடர்பான யூகங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவின் தற்போதைய மிகப்பெரிய சவால், கட்சியை விட்டு வெளியேறும் நிர்வாகிகளை தடுப்பது மட்டுமல்ல. கட்சிக்குள் ஒற்றுமையை நிலைநாட்டுவதும் தான்.
அதிருப்தி
அதே நேரத்தில், தேர்தல் தோல்விக்குப் பிறகு உருவான அதிருப்தி இன்னும் முழுமையாக அடங்கவில்லை. இந்த நிலையில் தினகரன் தொடர்பான தகவல்கள் மீண்டும் வெளியாகத் தொடங்கியிருப்பது, கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கட்சி மற்றும் தொண்டர் பலம் இன்னும் தங்களுடனேயே இருப்பதாக நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்த நகர்வுகள், பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் அதிமுகவில் வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது.
பொதுச் செயலாளர் பதவி
இருப்பினும், தேர்தல் தோல்விக்குப் பிறகு உருவாகியுள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? அதிமுகவின் அடுத்த தலைமைப் பதவியான பொதுச் செயலாளர் பதவி யாருக்கு செல்லப் போகிறது? என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் சில வாரங்களில் நடைபெற உள்ள சந்திப்புகள் அதிமுகவில் மீண்டும் கலகத்தை ஏற்படுத்தலாம் என்பதால் கலக்கத்தில் உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications