“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தவெக அரசை வெளிப்படையாகப் புகழ்ந்து பாராட்டினார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். இதற்கிடையே வைகோவை அவரது இல்லத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று சந்தித்து பேசினார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன்.17) சந்தித்துப் பேசினார். முதலமைச்சர் விஜய்யுடன் சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார் வைகோ.
இன்று முதல்வர் விஜய் உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், "ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினேன். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. எண்ணற்ற மக்கள் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்து இறுதியில் ஆலையை மூட வைத்தோம். தற்போது வேறு வடிவத்தில் ஸ்டெர்லைட் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் கிடைக்கிறது. எந்த சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்" என்றார்.
மேலும், "தனிப்பட்ட முறையில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். எனது நாடாளுமன்ற உரையை தொகுத்து வெளியிடும் நிகழ்ச்சிக்கு வருமாறு முதல்வரை அழைத்தேன். 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளை 6 பகுதிகளாக தொகுத்திருக்கிறேன். வரும் ஆகஸ்ட் 4ல் டெல்லியில் வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறேன்.
அந்த விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ள வேண்டும். குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட வேண்டுமென திட்டமிட்டிருக்கிறேன். முதலமைச்சர் விஜய் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறேன்; அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வைகோ, நீங்கள் இதுவரை பார்த்த முதலமைச்சர்களில், CM விஜய் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு, "எளிமையாக, இயல்பாக, வெளிப்படை தன்மையோடு இருக்கிறார்" என்றார்.
மேலும், "மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வார்களா என்பதை இப்போது சொல்ல முடியாது, யூகங்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது" என்றார். கூட்டணியில் இருந்து வெளியேறுவோமா? தவெகவுடன் இணைவோமா? எனப் பொதுக்குழுவில் தெரியும் என்று கூறினார்.
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்?













Click it and Unblock the Notifications