பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் வேகமாக மாறி வரும் நிலையில், அதிமுக உள்கட்சிப் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேர்தல் தோல்வி, கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு, அதன் பின்னர் நடந்த சமரசம் என பல்வேறு சவால்களை சந்தித்த அதிமுக, தற்போது நிர்வாகிகளை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் திணறுகிறது. இந்நிலையில், தவெக பக்கம் சிக்னல் கிடைக்காததால் வேலுமணி, விஜயபாஸ்கர், சிவி சண்முகம் உள்ளிட்டோர் திமுகவுக்கு தாவ தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், தமிழக அரசியலில் புதிய அதிகார மையம் உருவாகியுள்ளது.

இதனால் ஆண்ட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுமே தங்களது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுகவுக்கு தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தன.
அதிமுக
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலை உருவானது. இதையடுத்து கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் அதிகரித்தன. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சித்து சில எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டனர். பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் கட்சிக்குள் இணைந்தாலும், அவர்களது எதிர்காலம் குறித்து இன்னும் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி
கட்சிக்குள் மீண்டும் இணைந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள், தங்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர் பொறுப்புகள், முக்கிய அமைப்புகளின் தலைமைப் பதவிகள் அல்லது சட்டப்பேரவை மற்றும் கட்சி நடவடிக்கைகளில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என அவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இதுவரை அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியாகாததால், அதிருப்தி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் என பலர் அக்கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில், "கட்சியில் நீண்ட காலம் காத்திருக்க வேண்டுமா, அல்லது புதிய வாய்ப்புகளை தேடலாமா?" என்ற விவாதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்பி வேலுமணி
அதே நேரத்தில், எஸ்பி வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அதிமுக நிர்வாகிகள் திமுக தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த சிலர், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாற்று வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக எந்தத் தரப்பிலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
கொங்கு மண்டலம்
அதிமுகவில் இருந்து வெளியேறிய சில முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், மீதமுள்ள அதிருப்தி அணியினரை கட்சிக்குள் தக்கவைத்துக் கொள்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் பலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
புதிய பொறுப்பாளர்கள்
மறுபுறம், கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுவதும், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சிக்குள் நிலவும் அதிருப்தியை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிருப்தி குரல்கள்
எனினும், தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை நிர்வாகிகள் வெளியேறுவது மட்டுமல்ல; அவர்களுக்குப் பதிலாக புதிய தலைமுறையை உருவாக்குவதும் ஆகும். இந்தச் சவாலை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே அடுத்த சில மாதங்களில் அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில், கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் அடங்குமா அல்லது மீண்டும் பிளவு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications