“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!
சென்னை: செல்போன்களால் இரண்டு நாடுகள் மட்டுமல்ல.. ஒரு மாநிலமே போய்விட்டது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியிருக்கிறார். தவெகவின் வெற்றியைதான் அவர் இவ்வாறு சொல்கிறார் என நெட்டிசன்கள் புது சலசலப்பை கிளப்பியிருக்கின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக மற்றும் அதிமுக எனும் இரண்டு பெரிய திராவிட கட்சிகளை தமிழக வெற்றிக் கழகம் ஓரம் கட்டியிருக்கிறது.

என்னதான் சித்தாந்த ரீதியில் திமுக பெரிய ஜாம்பவனாக இருந்தாலும், தவெக இக்கட்சியை வீழ்த்தியிருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் இளம் தலைமுறையினர்தான் என்றும், இன்ஸ்டாகிராம் தான் இந்த வெற்றிக்கு உதவியது என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர் இப்படி இருக்கையில், செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
நீதிபதி பேசியதாவது, "நான் இன்று நீதிபதி. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறேன். நூற்றுக்கணக்கான மேட்ரிமோனி வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக கணவன்-மனைவிக்கு இடையே பிரிவுக்கு காரணம் மொபைல் போன்தான். அதனால்தான் அவர்களுக்கு இடையில் பிரேக்-அப் ஆகிறது.
அந்த விஷயங்கள் அனைத்தும் புத்தகத்தில் சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு முன்பு பேசியவர், செல்போனால் 2 தேசங்கள் போய்விட்டது என்று கூறியிருந்தார். ஆனால், ஒரு மாநிலமும் போய்விட்டது என்று நான் சொல்கிறேன்" என பேசியிருக்கிறார்.
ஒரு மாநிலம் போய்விட்டது எனில்? திமுகவின் அதே குற்றச்சாட்டைதான் நீதிபதி சுவாமிநாதனும் முன்வைக்கிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications