கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு ஆம்னி பேருந்து இயக்கப்படுகிறது ஏன் அரசு பேருந்து இயக்கப்படவில்லை எனவும், அதே போல் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் பேருந்து கிடைக்கவில்லை.. அதேபோல் இங்கிருந்து தென் மாவட்டத்திற்கு செல்ல பேருந்து கிடைக்கவில்லை என்று கிளாம்பாக்கம் ஆய்வின் போது அமைச்சரை நேருக்கு நேர் பயணி ஒருவர் கேள்பி எழுப்பி உள்ளார். அவருக்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன் அளித்த பதிலை பார்ப்போம்.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1981 பேருந்துகள் இங்கிருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது எனவும், சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு என்னென்ன வகையில் சிரமத்தை குறைக்கலாம் எனவும் அமைச்சர் தமிழன் பார்த்திபன் கூறினார்.

ஒரே வழியில் பேருந்து உள்ளே வருவதால் போக்குவரத்து துறை செய்யப்படுகிறது மாற்று வழியில் பேருந்தை பேருந்து நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் அதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது எனவும் அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கிளாமபாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பழனி ஒருவர் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு ஆம்னி பேருந்து இயக்கப்படுகிறது.. ஏன் அரசு பேருந்து இயக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் பேருந்து கிடைக்கவில்லை அதேபோல் இங்கிருந்தும் தென் மாவட்டத்திற்கு செல்ல பேருந்து கிடைக்கவில்லை என அமைச்சருடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமைச்சர் தமிழன் பார்த்திபன் உங்கள் கோரிக்கையை சரி செய்யப்படும் என சமாளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
பயணி கேட்டது போலவே அரசு பேருந்தில் வரும் பயணிகள் மட்டும் கிளாம்பாக்கத்திலேயே இறங்க வேண்டும் என்பதும், ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு வரை பயணிகளை ஏற்றி இறக்கலாம் என்பதும் எந்த வகையில் நியாயமே இல்லை. இதுபோன்ற கடந்த ஆட்சியில் இருந்தே தொடர்கிறது என்றாலும், எல்லாருக்கும் ஒரே நியாயம் இருக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் வேளச்சேரி வழித்தடத்தில் தனியாக ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. அதேபோல் அரசு பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ஏன் அரசு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
முன்னதாக கடந்த வாரம் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், "சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையான வசதியையும் எளிதான அணுகலையும் வழங்கவில்லை என்பது பயணிகளின் கருத்தாக உள்ளது. தற்போது, சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் செல்ல பயணிகள் தனியார் வாகனங்கள், கூடுதல் அரசு மாநகரப் பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேர விரயமும் போக்குவரத்து நெரிசலும் சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகரின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்து கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில், மின்சார ரயில் இணைப்புகள் இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படாததால், மக்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்றும் பிற பொதுப் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவில் உள்ளன.
சென்னையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பயணிகள் எளிதாக கோயம்பேடு வந்தடைந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய முடியும். சென்னை நகருக்குள் தினசரி பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை மற்றும் ஐ.டி. நிறுவனங்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் சுமார் 3,000 மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே வெளியூர் பேருந்துகள்தான் சென்னை போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணம் என்ற கருத்து சரியல்ல.
எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் அரசுப் பேருந்துகள் மற்றும் தென் மாவட்ட சேவைகளை மீண்டும் இயக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, பயணிகள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் " இவ்வாறு கூறிருந்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி














Click it and Unblock the Notifications