மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்
லண்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், 40 மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. இதனால் உலகெங்கும் மோசமான பொருளாதாரப் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தப் போர் உக்ரைனில் எந்தளவுக்கு மோசமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பாகப் பிரிட்டிஷ் உளவுத்துறை வெளியிட்டுள்ள ரிப்போர்ட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த போர் வெறும் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், உக்ரைன் துணிச்சலாகப் போராட.. மேற்கத்திய நாடுகள் பின்னால் இருந்து சப்போர்ட் கொடுக்க இந்தப் போர் மாதக் கணக்கில்... பிறகு வருடக் கணக்கில் என நீண்டு கொண்டே போகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை.

5 லட்சம் பேர்
இதற்கிடையே உக்ரைன் போர் தொடர்பாகப் பிரிட்டன் உளவு மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்பான GCHQ பிரிவின் இயக்குநர் ஆனி கீஸ்ட்-பட்லர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பான புதிய உளவுத்துறை டேட்டாவை வெளியிட்ட அவர், "நாங்கள் உக்ரைனுக்குத் தொடர்ந்து தார்மீக ஆதரவை வழங்கி வரும் சூழலில், அதிபர் புதின் போர்க்களத்தில் பின்வாங்கி வருகிறார். எங்களின் புதிய உளவுத்துறை ஆதாரங்களின்படி, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 5 லட்சம் ரஷ்ய வீரர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர்" என அதிரடித் தகவலை உடைத்தார்.
மூத்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் ரஷ்யாவின் மரண எண்ணிக்கையை இவ்வளவு துல்லியமாகப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். இதுநாள் வரை ரஷ்யா தனது இழப்பு குறித்து பொது வெளியில் வாய் திறந்ததே இல்லை. இருப்பினும், சர்வதேச ஊடகங்கள் இந்தப் போர் காரணமாக ரஷ்யா 3.5 லட்சம் வீரர்களை இழந்திருக்கலாம் எனக் கணித்திருந்தன. இருப்பினும், மரணம் அதை விட அதிகமாக இருக்கும் எனப் பிரிட்டிஷ் உளவுத்துறை இப்போது கணித்துள்ளது. அதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கவே செய்கிறது.
காரணங்கள்
அதாவது டான்பாஸ் பகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற புதினின் பிடிவாதத்தால்.. முறையான நவீனப் போர்ப் பயிற்சி இல்லாத புதிய இளம் வீரர்கள் மற்றும் சிறைக் கைதிகளை உக்ரைனின் பலமான தற்காப்பு அரண்களுக்கு எதிராக ரஷ்ய தளபதிகள் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணம்.. அடுத்து உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வரும் நவீன ட்ரோன்கள் மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கிய துல்லியமான ஏவுகணைகள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் சப்ளை டெப்போக்களை துவம்சம் செய்து வருவதால் மரணங்களின் எண்ணிக்கை எகிறியுள்ளது.
பாதிப்பு
ஒரே போரில் 5 லட்சம் பேரை இழந்திருப்பது ரஷ்ய மாளிகைக்கு ஒரு மிகப் பெரிய சமூக பொருளாதாரத் தலைவலியை உருவாக்கியுள்ளது.. வேலை செய்யும் வயதில் இருந்த லட்சக்கணக்கான ஆண்கள் போர்க்களத்தில் மடிந்ததாலும், ராணுவக் கட்டாய உத்தரவுக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடியதாலும், ரஷ்யாவின் விவசாயம், உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.
சமாளிப்பு
மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற பெருநகரங்களில் உள்நாட்டுப் புரட்சி வெடிக்காமல் இருக்க, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைப் பகுதி இளைஞர்களை ₹1.34 கோடி வரை கடன் தள்ளுபடி மற்றும் அதீதச் சம்பள ஆசைகளைக் காட்டி புதின் அரசு ராணுவத்தில் சேர்த்து வருகிறது. ஆனாலும், இந்தப் போர் முடியாமல் தொடர்வது ரஷ்யாவுக்கு மேலும் மேலும் அதிக இழப்பையே ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications