காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பெண் உள்பட தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை
உதம்பூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள், தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சண்டையில் பெண் ஒருவரும் உயிரிழந்தார்.
ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீநகரில் இருந்து பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது அப்போது உதம்பூர் மாவட்டம் நாகா பகுதியில் போலீசார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். பேருந்தில் பதுங்கி இருந்த தீவிரவாதி பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

பல மணிநேரமாக நீடித்த இந்த சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாகவும், ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் உதம்பூர் எஸ்.எஸ்.பி. தெரிவித்துள்ளார். மேலும் உயர் அதிகாரிகள் பலர் சண்டை நடைப்பெற்று வரும் இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்து வரும் தீவிர துப்பாக்கிச் சண்டையை அடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் அங்கு பல கிலோ மீட்டர்களுக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications