மேகாலயாவில் குழந்தைகள், கணவர் கண் முன்பு பெண் சுட்டுக் கொலை
ஷில்லாங்: மேகாலயாவில் பெண் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் அவரது 5 குழந்தைகளின் கண் முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேகாலயா மாநிலம் தெற்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கேரோ தேசிய விடுதலை முன்னணி என்ற போராளிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் அம்மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த பெண்ணின் கணவர் மற்றும் 5 குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றனர். இதை அந்த பெண் எதிர்த்ததால் அவர்கள் துப்பாக்கியை எடுத்து அப்பெண்ணின் தலையில் 6 முறை சுட்டனர்.
இதில் அந்த பெண் தலை சிதறி பரிதாபமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 35. கேரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கேரோ தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த போராளிகள் கொலை, கடத்தல், பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் மேகாலயாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications