உ.பி.யில் வரதட்சணைக் கொடுமை: உணவில் விஷம் வைத்து இளம்பெண் படுகொலை
முசாபர்நகர்: வரதட்சணைப் பிரச்சினை காரணமாக கணவரின் உறவினர்களால் இளம்பெண் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவிலேயே பரப்பளவில் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது அந்த வரிசையில் வரதட்சணைக் கொடுமையும் இணைந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புவரா கிராமத்தை சேர்ந்த ஜெய்ல் சிங் என்பவரது மனைவி நேஹா (28). சர்க்கரை ஆலை ஒன்றில் எஞ்சினீயராக வேலை செய்து வருகிறார் ஜெய்ல் சிங்.
இந்நிலையில், நேற்று நேஹா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்த நேஹாவின் குடும்பத்தார், வரதட்சணைப் பிரச்சினைக் காரணமாகவே அவர் கொலை செய்யப் பட்டுருக்கலாம் என கட்டோலி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக நேஹாவின் சகோதரர் பங்கஜ் என்பவர் கூறுகையில், சமீபகாலமாக ஜெய்ல் சிங் குடும்பத்தார் தனது தங்கையை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்ததாகவும், தற்போது உணவில் விஷம் வைத்துக் கொன்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நேஹாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications