Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லகலகலக.. திடீரென மெட்ரோ ரயிலில் ஏறிய 'சந்திரமுகி'.. பயந்து ஓடிப்போன பயணிகள்.. இது ஒரு கலகலகல வீடியோ!

சந்திரமுகி கெட்டப்பில் மெட்ரோ ரயிலில் ஏறிய பெண் பயணி ஒருவர், சகபயணிகளை பதற வைத்த வீடியோ இணையத்தை கலகலக்க வைத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: மெட்ரோ ரயிலில் இடம் பிடிப்பதற்காக, அங்கிருந்த பயணிகளை பதறி ஓட வைத்த வேடிக்கையான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பேருந்து மற்றும் ரயில்களில் இருக்கையைப் பிடிப்பது என்பது இப்போதும் பலருக்கு இமாலயச் சாதனைதான். அதற்காக பலரும் பல வழிகளில் முயற்சிப்பார்கள். சினிமாவிலும் இது தொடர்பான நிறைய காமெடிக் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். ஒரு படத்தில் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக ஒருவர் பாம்பை தூக்கிப் போட்டு, கண்டக்டர் வடிவேலுவைப் பதற வைப்பார். அவர்களையே ஜன்னல் வழியே பேருந்திற்குள் இறக்கி விட்டு, சீட் பிடித்த அனுபவங்கள் 90ஸ் கிட்ஸ்களுக்குத் தெரியும்.

தற்போதும் ராஜஸ்தானில் அப்படித்தான் ஒரு இளம்பெண், மெட்ரோ ரயிலில் இருக்கையைப் பிடிக்க சுற்றியிருந்தவர்களைப் பதற வைத்த வீடியோ ஒன்று இணையத்தை கலகலக்க வைத்திருக்கிறது.

மஞ்சுலிகா

மஞ்சுலிகா

இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் ஒன்றில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் இளம்பெண் ஒருவர், சந்திரமுகி படத்தில் ஜோதிகா வருவது போல அடர் மஞ்சள் நிற சேலையில் அதே போன்ற பயங்கர தோற்றத்தில் மெட்ரோ ரயிலில் ஏறுகிறார். அதன்பின், சந்திரமுகியின் இந்தி ரீமேக்கான பூல் புலாயா படத்தில் மஞ்சுலிகாவின் (அதாங்க இந்தி சந்திரமுகி) டயலாக்குகளைப் பேசியபடியே, அங்குள்ள பயணிகளைப் பயமுறுத்துகிறார்.

பயத்தில் உறைந்த பயணிகள்

பயத்தில் உறைந்த பயணிகள்

திடீரென இப்படி ஒரு கெட்டப்பில் ஒருவர் மெட்ரோ ரயிலில் ஏறியதைக் கண்டு, அங்கிருந்தவர்கள் பயப்படுகின்றனர். ஆனால் தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாமல், ஒரு இளைஞர் குனிந்தபடி, காதில் ஹெட்போன் போட்டு, ஏதோ செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த இளைஞரின் முகத்தருகே குனிந்து அப்பெண் பார்க்கிறார்.

 இடத்தைப் பிடிக்க யுக்தி?

இடத்தைப் பிடிக்க யுக்தி?

இதைச் சற்றும் எதிர்பார்க்க அந்த இளைஞர், அலறியடித்து தன் இருக்கையில் இருந்து எழுந்து ஓடுகிறார். அதன்பின்னர், அவரது இடத்தில் போய் ஹாயாக அமர்ந்து கொள்கிறார் அப்பெண். அப்போதும் கோபம் தணியாமல் அப்பெண் இருப்பது போன்ற காட்சிகளுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

விளம்பரமா?

விளம்பரமா?

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, 'எப்படி இப்படியொரு கெட்டப்பில் அந்தப் பெண், பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து மெட்ரோ ரயிலுக்குள் வந்தார்?' எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஏதோ ஒரு விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட சம்பவமாக இருக்கலாம் எனவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+