மனைவியை ரூ.1.5 லட்சத்திற்கு விலை பேசிய கணவர்: பணம் கொடுக்காமல் சீரழித்த நண்பர்கள்

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இஷார் அலி லஷ்கர்(26). அவர் கடந்த நவம்பர் 28ம் தேதி மேற்கு வங்கத்தில் இருந்து மும்பைக்கு தனது 23 வயது மனைவியுடன் வந்துள்ளார். மும்பை மங்குட் ரயில் நிலையத்தில் வந்திறங்கியவுடன் அவர் அங்கு காத்திருந்த தனது நண்பர்கள் மொபின் குரேஷி(40), சஜித் குரேஷி(24), நிஜாம் கான்(25) மற்றும் சுஜித் குமார் சௌராஸ்யா(43) ஆகியோருடன் ஆட்டோவில் செல்லுமாறு தனது மனைவியை அனுப்பி வைத்துள்ளார்.
தான் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மும்பைக்கு வரும் முன்பு அவர் தனது மனைவியை ஒரு நாள் இரவு அனுபவிக்க நண்பர்கள் 4 பேரிடம் ரூ.1.5 லட்சம் விலை பேசியுள்ளார். அதன்படி தான் அந்த நால்வரும் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.
ஆனால் செல்லும் வழியில் அவர்கள் அலியிடம் இருந்து தப்பிச் சென்று அந்த பெண்ணை பைங்கன்வாடியில் உள்ள ஜாகிர் ஹுசைன் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து நவம்பர் 30ம் தேதி இரவு 9.30 மணி முதல் டிசம்பர் 1ம் தேதி அதிகாலை 3.30 மணி வரை அந்த 4 பேரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இரவு 1.30 மணி வரை தனது மனைவியையும், அந்த நான்கு பேரையும் தேடிய அலி அவர்கள் தான் கேட்ட அளவுக்கு ரூ.1.5 லட்சம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்தார். பின்னர் விலையை ரூ. 50,000 ஆக குறைத்த அவர் ரூ.1,500 வரை இறங்கி வந்தார். ஆனால் அந்த 4 பேர் பணம் தர மறுத்ததால் தனது மனைவி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அலி தான் பேரம் பேசி மனைவியை அனுப்பியதை அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அலியையும் கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications