சாமியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை: உ.பியில் பயங்கரம்
மதுரா: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாமியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டப் பெண், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்தபோது மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இந்தக் கொலையால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
உத்தரப்பிரதேசம், மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் சாமியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சாமியார் மீது அப்பெண் போலீசில் புகார் அளித்தார்.
அதன் வழக்கு விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட சாமியார் கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்காக தனது தாயாருடன் நீதிமன்றம் வந்திருந்தார் அந்த பாதிக்கப்பட்டப் பெண். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே அப்பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக பலியானார்.
அப்பெண்ணின் தாயாருக்கும் குண்டடி பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications