புருஷனுடன் செல்போனில் பேசிக் கொண்டே கட்டிலில் அமர்ந்த கீதா.. பரிதாப பலி.. பதற வைத்த சம்பவம்!

செல்போன் பேசிக் கொண்டே பாம்புகள் மீது உட்கார்ந்த பெண் பலியானார்

Subscribe to Oneindia Tamil

கோரக்பூர்: செல்போனில் புருஷனுடன் பேசிக் கொண்டே கட்டில் மீது உட்கார்ந்து விட்டார் அந்த பெண்.. அங்கே இரண்டு ஜீவன்கள் ஜாலியாக இருப்பதை பார்க்கவே இல்லை.. இறுதியில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள கிராமம் ரியானவ். இங்கு வசித்து வரும் தம்பதி ஜெய்சிங் யாதவ் - கீதா. ஜெய்சிங் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார்.

Woman sits on Two snakes while talking on cell phone gets in UP

அதனால் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி செல்போனில் பேசுவார்கள். அப்படியே பேசினாலும் ரொம்ப நேரத்துக்கு பேசுவார்களாம்,

அப்படித்தான் நேற்றும் போன் வந்திருக்கிறது. செல்போனில் கணவனிடம் பேசிக் கொண்டே கீதா பெட்ரூமுக்குள் நுழைந்தார். அங்கே பெட்டில் 2 பாம்புகள் விளையாடிக் கொண்டு எசகுபிசகாக ஜாலியாக இருந்தன. ஆனால் கீதா இதை கவனிக்காமல், போனில் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டே, அப்படியே பெட்-டில் உள்ள பாம்புகளின் மீது உட்கார்ந்து விட்டார். அந்த பாம்புகளோ ஆவேசம் ஆகி கீதாவை கொத்தி குதறிவிட்டன.

அதே பெட்டிலேயே மயங்கி விழுந்தார் கீதா. வீட்டில் உள்ளவர்கள் அலறல் சத்தம் கேட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், கீதா இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டனர். அதிர்ச்சி நிறைந் கண்ணீருடன் குடும்பத்தினர் வீட்டிற்கு கீதாவை தூக்கி கொண்டு வந்தனர்.

அப்போது அந்த பாம்புகள் அப்பவும் அதே பெட்டில் ஜாலியாக இருந்தன. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர், 2 பாம்புகளையும் அங்கேயே அடித்தே கொன்றுவிட்டனர். பொதுவாக, பாம்புகள் இனச் சேர்க்கையில் இருந்தால் ரொம்பவும் ஈடுபாட்டுடன் இருக்கும். அதை தொந்தரவ செய்தால் ஆவேசம் ஆகிவிடுமாம். அதனால்தான் கீதாவை பாம்புகள் கடித்துள்ளன என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+