குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடிய பெண் தாசில்தார்.. தீயாய் பரவிய வீடியோ.. விதிமீறல்.. ஆக்ஷனுக்கு உத்தரவு
மாஸ்க் இல்லாமல் பெண் அதிகாரி ஒருவர் டான்ஸ் ஆடியுள்ளார்
புவனேஸ்வர்: தம்பியின் திருமணத்தில், டான்ஸ் ஆடியபோது கொரோனா விதிமுறைகள் அத்தனையையும் காற்றில் பறக்க விட்டுள்ளார் ஒரு பெண் தாசில்தார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் பரவி வருகிறது.. தொற்று எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.. உயிர்பலியும் அதிகமாக இருக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவை மீறும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்...!

வழக்கு
இப்படி தேவையில்லாமல் ஊர் சுற்றினால், கொரோனா விதிகளை மீறினால், நம்ம ஊரில்தான் வழக்கு போட்டு, பைக்கையும் பறிமுதல் செய்கிறார்கள். ஆனால், வடமாநிலங்களில் அப்படி இல்லை.. அங்கு தொற்று பாதிப்பு கட்டுக்கடங்காமல் இருப்பதால், விதிகளை மீறுவோர் மீது சீரியஸ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. மாஸ்க் போடாவிட்டாலும், கடுமையாக நடுரோட்டிலேயே சில போலீசார் பொதுமக்களை தூக்கி போட்டு மிதிக்கிறார்கள்.

கண்காணிப்பு
சில நேரங்களில் அதிகாரிகளே நேரடியாக களத்தில் இறங்கி கண்காணிக்கிறார்கள்.. இதில் பெண் அதிகாரிகள்தான் சமீப காலமாக வைரலாகி வருகிறார்கள்.. இதற்கு காரணம், கொரோனா விதிகளை மீறுவோர் மீது அங்கேயே பளார் பளார் என கன்னத்தில் அறைந்துவிடுகிறார்கள்.. இதனால், இவர்கள் ஓவர்நைட்டில் அவர்கள் ஃபேமஸ் ஆவதுடன், இது சர்ச்சையாகி, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பும் கேட்டு வருகிறார்கள்.

திருமணம்
ஆனால், இதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.. ஒரு பெண் தாசில்தார் அவருடைய சகோதரர் திருமணத்தில் டான்ஸ் ஆடிஉள்ளார்.. இந்த டான்ஸ்தான் இணையத்தில் வீடியோவாக வெளிவந்து பெரும் பரபரப்பை தந்து வருகிறது. ஒடிசா மாநிலம் சுகிந்தா பகுதியில்தான் இந்த பெண், தாசில்தாராக வேலை பார்க்கிறார்.. பெயர் புல்புல் பெகரா..

சகோதரர்
கடந்த வெள்ளிக்கிழமை இவரது சகோதரருக்கு கல்யாணம் நடந்துள்ளது.. பொதுவாக வடமாநிலங்களில், இந்து மத திருமணம் என்றாலே நிறைய சடங்குகள் இருக்கும்.. அந்தவகையில், இந்த திருமணத்திற்கும் ஊர்வலம் நடந்துள்ளது.. ஒருகுறிப்பிட்ட அளவுக்குதான் ஆட்கள் பங்கேற்க வேண்டும் என்ற விதி இருந்தும், ஏராளமானோர் இந்த கல்யாணத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஊர்வலம்
அப்போது நடந்த மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில், பெண் தாசில்தார் டான்ஸ் ஆடிக் கொண்டே சென்றார்.. டான்ஸ் ஆடுவதற்கு முன்பு மாஸ்க் போட்டுள்ளார்.. ஆனால், அது தொந்தரவாக இருப்பதாக நினைத்து, மாஸ்க்கை கழட்டி கையில் பிடித்து கொண்டே டான்ஸ் ஆடுகிறார்.. இவருடன் டான்ஸ் ஆடுபவர்களும் மாஸ்க் போடவில்லை.

வீடியோ
உயரதிகாரி பொறுப்பில் இருந்துகொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவரே இப்படி நடந்து கொண்டாரே என்ற அதிர்ச்சி கிளம்பி உள்ளது.. அத்துடன், கொரோனா விதி மீறலில் ஈடுபட்ட சம்பவம் பலரது கண்டனத்துக்கும் ஆளாகியது... விவகாரம் பெரிதாக வெடித்ததையடுத்து, ஜாஜ்பூர் கலெக்டர், அந்த பெண் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.. விரைவில் பெண் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications