மாமியார்களே, மருமக டீ குடுத்தா உடனே வாங்கி குடிச்சிராதீங்க.. குடிச்சிராதீங்க.. குடிச்சிராதீங்க!
இந்தூர், ம.பி.: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு மருமகள், தன்னைக் கொடுமைப்படுத்திய நாத்தனார்களையும், மாமியாரையும் மிகவும் நூதனமான முறையில் பழிவாங்கி வந்துள்ளார். அதுவும் கடந்த ஒரு வருடமாக.
வெளியில் சொன்னால் நாறிப் போய் விடும் என்பார்களே.. அது இந்த செய்திக்கு செம பொருத்தமாக இருக்கும்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்நத்வர் தீபக். 34 வயதான இவரது மனைவி பெயர் ரேகா நாக்வன்ஷி (30). இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணமாகி வந்தது முதலே மாமியார், நாத்தனார் தொல்லை தாங்க முடியாமல் அவதிப்பட்டார் ரேகா.
ஒரு அடிமை போல ரேகாவை வேலை வாங்கி வந்துள்ளனர் அவரது கணவர் வீட்டார். பொறுத்துப் பார்த்த ரேகா கணவரிடம் ஒருமுறை பொங்கி விட்டார். தனிக் குடித்தனம் போக வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆரம்பத்தில் கணவர் இதற்கு மறுத்தாலும் பின்னர் தனிக் குடித்தனம் போக சம்மதித்தார். ஆனால் அங்கு போன பின்னர் நமது குழந்தைக்காக எங்களது வீட்டுக்கே போகலாம் என்று வற்புறுத்தியுள்ளார் கணவர்.
இதையடுத்து சில நிபந்தனைகளுடன் இதற்கு ரேகா ஒத்துக் கொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு மாமியார் சூரஜ், மாமனார் அஜீத், நாத்தனார்கள் கொடுமை தலை விரித்தாடத் தொடங்கி விட்டது.
இதனால் வெகுண்ட ரேகா, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். அதன் இறுதியில்தான் இந்த நூதன ஐடியா அவருக்கு வந்துள்ளது. அதாவது தனது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்களுக்கு தரும் டீயில் சிறு நீர் கழித்து அதைக் கொடுக்க ஆரம்பித்தார். கடந்த ஒரு வருடமாக இதைச் செய்து வந்துள்ளார்.
ஒரு நாள் மாமியார் சூரஜ், சமையல் கட்டுக்குள் வந்துள்ளார். அப்போது அங்கு ரேகா டீ பாத்திரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து என்ன என்று கேட்டபோதுதான் கடந்த ஒருவருடமாக நடந்து வந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து சூரஜ், அஜீத் ஆகியோர் போலீஸில் போய் புகார் கொடுத்தனர். ஆனால் போலீஸாரோ, இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறி விட்டனர். இதனால் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது.
கடந்த ஒரு வருடமாக தங்களை இழிவுபடுத்தி வந்த தங்களது மருமகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது ரேகா தனது கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து போய் விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications