மாமனார், மாமியாரை வெட்டி கொன்று, கணவனை கொலை செய்ய முயன்ற பெண், காதலனுடன் கைது
பெங்களூர்: கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த மாமனார், மாமியாரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மருமகளும், அவரது கள்ளக்காதலனும் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரை கொலை செய்ய முயன்றபோது, அவர் அதிருஷ்டவசமாக தப்பியுள்ளார்.
வேலூரை சேர்ந்தவர் கண்ணன் (70) அவரது மனைவி மனோரமணி (65) மகன் மணிகண்டன் (34), மருமகள் துர்கா (24). மணிகண்டன்-துர்கா நடுவே 8 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. 7 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர்.

பெங்களூரின் காடுகோடி பகுதியில் தங்கியிருந்தது இந்த குடும்பம். கண்ணன்-மனோரமணி இருவரும் காய்கறி விற்று பிழைப்பு நடத்திய நிலையில், மணிகண்டன், அங்கிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலுள்ள எலக்ட்ரானிக்சிட்டி பகுதியில் லேப்டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் துர்காவுக்கும் அவரது உறவுக்காரர் அன்ஜி (23) என்பவருக்கும் கள்ளக்காதல் கடந்த ஓராண்டாக ஏற்பட்டுள்ளது. அன்ஜி பஞ்சாப்பில், ராணுவத்தில் பணியிலுள்ளவராகும். அவ்வப்போது பெங்களூர் வந்து துர்காவுடன் நெருக்கமாக இருந்துள்ளார் அன்ஜி. தொடர்ந்து தொலைபேசியிலும் இருவரும் காமரசம் சொட்ட பேசிவந்துள்ளனர்.
மருமகளின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததும், கண்ணன்-மனோரமணி இருவரும் கண்டித்துள்ளனர். இது துர்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அன்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நாம் இருவரும் ஊரை விட்டு ஓடிவிடலாம் என கூப்பிட்டுள்ளார்.
துர்காவின் ஐடியாவை ஏற்ற அன்ஜி, ரயில் மூலம், பெங்களூருக்கு வந்து சேர்ந்துள்ளார். காலை வேளை முழுக்க ரயில் நிலையத்தில் இருந்த அன்ஜி, துர்கா தவிர அனைவரும் வேலைக்கு போனதை அறிந்து காலை 11 மணியளவில் துர்கா வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஓடிப்போகும் முன்பாக உல்லாசமாக இருக்கலாம் என இருவரும் காம லீலையை ஆரம்பித்துள்ளனர். 11.30 மணியளவில் கண்ணன் திடீரென வீடு திரும்பியுள்ளார். மருமகளும், அவரது உறவுக்காரரும் உடலுறவு செய்துகொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதை பார்த்த அன்ஜி, கோபத்தில், கண்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார்., சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். மதியம் சாப்பாட்டுக்கு வீடு திரும்பியுள்ளார் மனோரமணி. அவரையும் மறைந்திருந்து திடீரென வெட்டி சாய்த்துள்ளார் அன்ஜி.
இருவர் சடலங்களையும் வீட்டுக்குள் ஓரிடத்தில் எடுத்துப்போட்ட அன்ஜியும், துர்காவும், மணிகண்டனை கொலை செய்ய காத்திருந்தனர். இரவு 7 மணியளவில் மணிகண்டன் வீடு திரும்பியுள்ளார். அன்ஜி பெட்ரூமில் ஒழிந்திருந்த நிலையில், துர்கா ஒன்றுமே நடக்காததை போல கணவனை வரவேற்று காபி கொடுத்துள்ளார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
மின்சாரம் மீண்டும் வந்ததும் 7.30 மணியளவில், பெட்ரூமுக்குள் செல்போனுக்கு சார்ஜ் போட சென்றுள்ளார் மணிகண்டன். அங்கு மறைந்திருந்த அன்ஜி, அரிவாளால் மணிகண்டனை வெட்டியுள்ளார். அவரது தலையில் வெட்டு விழுந்துள்ளது. இதன்பிறகு, மீண்டும் அன்ஜி அரிவாளை ஓங்கியபோது, மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு, அன்ஜியை மிதித்து தள்ளிவிட்டு வெளியே ஓடியுள்ளார்.
மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த அன்ஜியும், துர்காவும் அங்கிருந்து ஓடியுள்ளனர். ஆனால் அக்கம்பக்கத்து மக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்து காவல்துறையிடம் பிடித்து கொடுத்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications