ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி. கோரும் வழக்கு: அரசியல் சாசன பெஞ்சுக்கு மாறுகிறது..
டெல்லி: கேரளா சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும் அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், பல்லாண்டு கால மத நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடுவது, அந்த நம்பிக்கைக்கு இழைக்கப்படும் அநீதி என்று முன்பு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எனவே, மத நம்பிக்கையை நீதிமன்றம் உள்பட யாருமே கேள்வி கேட்க முடியாது என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் என்பது பொதுவான ஆன்மிக தலம். அங்கு வரும் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது.
அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு அனுமதி மறுப்பது, அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.
எனவே இந்த வழக்கு 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்புவதற்கு உகந்தது என்று நாங்கள் நினைக்கக்கூடும். அப்படி மாற்றுவதாக இருந்தால் விரிவான உத்தரவை பிறப்பிப்போம். இந்த பிரச்சினை இதற்கு முன்பு எழவில்லை என்று கருதுகிறோம் என்றனர்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications