மகளிர் தின ஸ்பெஷல்: 'கதக்' ஆடி அசத்திய பி.ஹெச்.டி. மாணவ, மாணவியர்
பெங்களூர்: முதன்முதலாக இந்த பத்திரிக்கையாளர் ஜெயந்தி எஸ் ஈஸ்வர்புதியை கடந்த 2013ம் ஆண்டு பெங்களூர் மதிகரே அருகில் உள்ள அவரது வாடகை வீட்டில் சந்தித்தார். அப்போது ஜெயந்தி தன்னை சந்திக்க வந்த பத்திரிக்கையாளரிடம், மன்னித்து விடுங்கள் ஜி. என் வீட்டில் நாற்காலி இல்லை. என் மாணவியர் தரையில் தான் அமர்வார்கள். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸ்(ஐஐஎஸ்சி) வளாகத்தில் ஜெயந்தியை பார்த்தபோது உங்களுக்காக முதல்வரிசையில் இருக்கையை முன்பதிவு செய்துள்ளேன் என்றார் சிரித்தபடி.
ஐஐஎஸ்சியில் ஜெயந்தியின் மாணவியரின் வருடாந்திர நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது மாணவியர் அனைவருமே பி.ஹெச்.டி. படித்து வருபவர்கள். ஜெயந்தியின் சீடர்களில் ஒருவர் மட்டுமே ஆண்.

என் மாணாக்கர் படிப்பது என்ன என்பது எனக்கு புரியாது என்று தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக குருவின் பேச்சை கேட்டு நடக்கும் ஜெயந்தி தெரிவித்தார்.
இது குறித்து மகளிர் தினத்தன்று ஜெயந்தி ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
தந்தையின் விருப்பத்தை எதிர்த்து செயல்பட்டது கடினம் தான். ஆனால் அதற்காக வருந்தவில்லை. கடவுளுக்கு அடுத்தபடியாக உள்ளவர் குரு அல்லவா. எதை செய்தாலும் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ஜெயந்தி கதக் நாட்டிய ஜாம்பவான் பண்டிட் பிர்ஜு மகராஜின் சிஷ்யை. பி.ஹெச்.டி அதாவது முனைவர் பட்டம் பெற்ற பிறகு தங்களின் வேலையுடன் ஜெயந்தியுடன் சேர்ந்து
நாட்டியத்தை தொடர அவரது மாணவ, மாணவியர் முடிவு செய்துள்ளனர். மாணவ, மாணவியர் ஜெயந்தியை அக்கா என்று அழைக்கிறார்கள். அவரும் அவர்களை தனது குழந்தைகளாகவே கருதுகிறார்.
ஜெயந்தியின் ஒரே மாணவரான சந்தீப் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அவர் படிப்புக்கும், நடனத்திற்கும் சரி சமமாக முக்கியத்துவம் அளிக்கிறார். ஐஐஎஸ்சியில் ஜெயந்தியின் நடனத்தை பார்த்து அசந்த சந்தீப் தானும் நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார். தனது ஆசையை அவர் ஜெயந்தியிடம் தெரிவிக்க அவரும் சந்தீப்பை தனது சீடனாக ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து சந்தீப் கூறுகையில்,
எனக்குள் நடன ஆசை ஏற்பட அவர் தான் காரணம். அவரை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நடனம் எப்போதுமே கச்சிதமானது கிடையாது. அதை பயிற்சி மூலம் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பார் என்றார்.

ஜெயந்தியின் மாணவியான சென்னையைச் சேர்ந்த வைஷாலி கூறுகையில்,
கலை மீது பெருமதிப்பு வைத்திருப்பவர் ஜெயந்தி. இம்முறை தான் இத்தனை பி.ஹெச்.டி. மாணவ, மாணவியர் நடனம் கற்றுக் கொள்கிறோம் என்றார்.
கேரளாவைச் சேர்ந்த துஷாரா வேணுகோபால் கூறுகையில், ஜெயந்தி அக்கா வெற்றிகரமான குரு. வலியை விரும்புங்கள் அப்போது தான் வெற்றி பெற முடியும் என்பார் என்றார்.
மும்பையைச் சேரந்த ஸ்ருதி காரேவுக்கு நடனம் மன அழுத்தத்தை குறைக்கும் வழி. தான் நடன வகுப்பில் சேர்ந்ததில் இருந்து ஆய்வு மற்றும் அதனை சமர்பிக்க வேண்டிய நேரம் பற்றி பயப்படவில்லை என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மகளிர் தினத்திற்கு இத்தனை வரவேற்பு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி என்று ஜெயந்தி தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications