பீகார்: குடும்பச் சண்டையில் ஒருவர் மீது ஒருவர் ஆசிட் வீசிக் கொண்ட சகோதரிகள்
பாட்னா: பீகாரில் குடும்பச் சண்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் ஒருவர் மீது ஒருவர் ஆசிட் வீசிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சவ்பால் மாவட்டம் கட்டையா கிராமத்தைச் சேர்ந்த கூட்டுக் குடும்பம் ஒன்றில் அண்ணன், தம்பியைத் திருமணம் செய்து கொண்ட இரண்டு பெண்கள் அவர்கள்.
அக்கா - தங்கை உறவு முறை கொண்ட அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில், நேற்று சமையல் செய்து கொண்டிருந்த போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடுங்கோபத்தில் இருந்த இருவரும் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசியுள்ளனர். இதில் ஒரு பெண்ணிற்கு முகத்திலும், மற்ரொருவருக்கு கழுத்திலும் காயம் உண்டானது.
உடனடியாக அவர்கள் இருவரையும் குடும்பத்தார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்த அப்பெண்களின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஒருவர் மீது ஒருவர் ஆசிட்டை வீசிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications