உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நட்சத்திரங்கள் - அமிதாப், சல்மான், அக்சய் இவர்களுடன் தோனி
மும்பை: உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 100 பேரை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை. உலகில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.
அமிதாப் பச்சன், சல்மான்கான், அக்சய் குமார் இந்த மூவரும் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களைத் தவிர்த்து இந்தியாவில் இருந்து நான்காவதாக நட்சத்திர விளையாட்டு வீரரான மகேந்திர சிங் தோனியும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
முதல்முறையாக போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த வருடம் நடிகர்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துள்ளது, நாடு, மொழி, இனம் என்ற எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது போர்ப்ஸ்.
மிகவும் பிரபலமான ஹாலிவுட் நட்சத்திரங்களை விடவும் இவர்கள் நால்வரும் அதிகம் சம்பாதித்து, இந்தப் பட்டியலில் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன்
போர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியலில் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் திரை நட்சத்திரங்களில் முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் அமிதாப் பச்சன், 71 வது இடத்தில் நடிகர் சல்மானுடன் இந்த இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் அமிதாப். ஆண்டொன்றுக்கு 33.5 மில்லியன் டாலர்களை இவர் சம்பாதிக்கிறார்.

சல்மான் கான்
என்னதான் கோர்ட், கேஸ் என்று அலைந்தாலும் சம்பாதிப்பதில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார் சல்மான். மூத்த நடிகர் அமிதாப் பச்சனுடன் 71 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டு இருக்கும் சல்மான் ஆண்டொன்றுக்கு சம்பாதிப்பது 33.5 மில்லியன் டாலர்களாம்.

அக்சய் குமார்
இந்தி உலகில் இருந்து மூன்றாவது நடிகராக இந்தப் பட்டியலில் இணைந்து இருக்கிறார் அக்சய் குமார். 76 வது இடத்தில இருக்கும் அக்சய் குமார் ஆண்டொன்றிற்கு சுமார் 32.5 மில்லியன் டாலர்களை சம்பாதிப்பதன் மூலம் இந்தத் தரவரிசையில் இடம் பிடித்து இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி
இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே ஒரு விளையாட்டு வீரர் தோனி தான், உலகின் மிக அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலமாக இந்தப் பட்டியலில் 82 வது இடத்தில இருக்கிறார் தோனி. இவரின் மொத்த வருவாய் 31 மில்லியன் டாலர்கள்.

பட்டியலில் நம்பர் 1
இந்தப் பட்டியலில் நம்பர் 1 இடத்தை அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் பிலாய்ட் மேவெதர் பிடித்துள்ளார், இவரின் வருமானம் 300 மில்லியன் டாலர்கள்...அடுத்த இடத்தை இவரின் சக குத்துச்சண்டை வீரர் மெனி பாக்குவோ 160 மில்லியன் டாலர்களுடன் பிடித்துள்ளார்.

எந்தத் துறையினர் அதிகம்
100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் 38 இசைக் கலைஞர்கள், 29 விளையாட்டு வீரர்கள், 19 நடிகர்கள், 6 பிரமுகர்கள், 3 வானொலி நட்சத்திரங்கள், 2 நகைச்சுவை நடிகர்கள், 1 சமையல் கலைஞர், 1 எழுத்தாளர் மற்றும் மாடல் ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications