4 பேர் மரணம்.. 50க்கும் அதிகமானோர் படுகாயம்.. வடமாநிலங்களை முடக்கிய தலித் போராட்டம்
இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் தற்போது பெரிய அளவில் கலவரமாக மாறியுள்ளது.
Recommended Video

டெல்லி: இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் தற்போது பெரிய அளவில் கலவரமாக மாறியுள்ளது.
கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது.
இது அந்த சட்டத்தையே கேள்விக்குறியாக்கியது. இதற்கு எதிராக இந்தியா முழுக்க தலித் மக்கள் போராடி வருகிறார்கள். இது அங்கு இயல்பு வாழ்க்கையை பாதித்து இருக்கிறது.

மோசமான கலவரம்
இந்த போராட்டம் மிகவும் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. பல இடங்களில் மக்கள் கள்ள துப்பாக்கிகளை வைத்து சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கடைகள் , பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் போலீஸ் சில அப்பாவி மக்களையும் தேவையில்லாமல் தாக்கி இருக்கிறது.

துண்டிப்பு
மேலும் மத்திய பிரதேசம் முழுக்க இணையம் முடக்கப்பட்டு உள்ளது. 4 மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி முழுக்க இந்த போராட்டம் காரணமாக ஸ்தம்பித்து இருக்கிறது.

எத்தனை மரணம்
இன்று மட்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த போராட்டம் காரணமாக 4 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 50க்கும் அதிகமான நபர்கள் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் டெல்லி, உத்தர பிரதேசத்தில் நிறைய பேர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விசாரிக்க முடியாது
ஆனாலும் இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் செய்த மாற்றத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசு செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. போராட்டம் நடக்கிறது என்பதற்காக அவசர வழக்காக விசாரிக்க முடியாது, நாளை இல்லை நாளை மறுநாள் இது பற்றி விசாரிப்போம் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications