2000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் போட்டு புழக்கத்தில் விட்ட ஆபரேட்டர் கைது!
பஞ்சாப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் போட்ட கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 2000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து மோசடி செய்ய முயன்ற அதன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமிர்தசரஸை அடுத்த பிக்கிவிண்ட் நகரைச் சேர்ந்த சந்தீப் குமார் என்பவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதிகளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழங்குவதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் 2000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்த சந்தீப்குமார் மற்றும் அவரது நண்பர் ஹர்ஜிந்தர் சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிக்கிவிண்ட் பகுதியில் மிக குறைந்தளவே 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால் அவற்றை ஜெராக்ஸ் எடுத்து மக்கள் மத்தியில் விட்டால் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர்களுக்கு 2000 ரூபாய் நோட்டு பரிச்சயம் இல்லாததால் அவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்றும் திட்டம்போட்டு செயல்படுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும் இதில் குர்மிலாப் சிங் என்பவருக்கும் தொடர்புள்ளதை கண்டுபிடித்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications