தூக்குக்கு தடை கோரும் யாகூப் மேமனின் மனு- வரும் 27-ல் விசாரிக்கிறது சிறப்பு பெஞ்ச்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தமக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு மீது வரும் 27-ந் தேதி சிறப்பு பெஞ்ச் விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி 13 இடங்களில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றினர். இதில் 257 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 713 பேர் படுகாயப்படுத்தினார்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பயங்கரவாத தாக்குதல் இது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் ஜனாதிபதியிடம் யாகூப் மேமன் கருணை மனுவைத் தாக்கல் செய்தார். இக்கருணை மனுவும் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை வரும் 30-ந் தேதியன்று தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மற்றும் நிவாரண மனுக்களை யாகூப் மேமன் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் நிவாரண மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநரிடம் மீண்டும் ஒரு கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உச்சநீதிமன்றத்தில் தமக்கு விதிக்கப்பட்ட துக்குக்கு தடை கோரி புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப் புதிய மனு மீது வரும் 27-ந் தேதியன்று சிறப்பு பெஞ்ச் விசாரணை நடத்தும் என்று இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து கூறியுள்ளார். அதே நேரத்தில் யாகூப் மேமனை தூக்கில்டும் பணிகளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டு வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications