பெங்களூரு: காங்கிரசின் பிரதாப் கவுடா, ஆனந்த்சிங் ஆகிய 2 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எம்எல்ஏக்களை காங்கிரஸ் தலைவர்களால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனிடையே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என ஸ்ரீராமலு அறிவித்து பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார். பாஜக தொண்டர்கள் மத்தியில் பகிரங்கமாக ஸ்ரீராமலு அறிவிப்பு வெளியிட்டார். பாஜக எம்எல்ஏவாகியுள்ள ஸ்ரீராமலு ரெட்டி சகோதரர்களுக்கு உற்ற நண்பன் என்பது கவனிக்கத்தக்கது.
தொண்டர்கள் வாழ்த்து கோஷம் முழங்க முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரால் எடியூரப்பா பதவி பிரமாணம் செய்து கொண்டார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அவர் பதவியேற்றார்.
அவருடன் கோவிந்த காரஜோலா, ஸ்ரீராமலு, ஈஸ்வரப்பா, ஆர்.அசோக்கும் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது. முதல்வராக பதவியேற்க பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட அவர், வழியில் பெங்களூர் ராதாகிருஷ்ணன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
May 17, 2018, 8:00 pm IST
கர்நாடகா சட்டசபை காங். தலைவராக பரமேஸ்வரா தேர்வு
May 17, 2018, 7:59 pm IST
பெங்களூரு ஹோட்டலில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு
May 17, 2018, 7:15 pm IST
பெங்களூரில் இருந்து இன்று இரவே காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் கொச்சிக்கு பயணம்
May 17, 2018, 7:14 pm IST
எம்எல்ஏக்கள் நடவடிக்கைகளை உளவுத்துறை மூலம் கவனிப்பதாக எடியூரப்பா கூறியிருந்தார்
May 17, 2018, 7:14 pm IST
பாஜக வலையில் இருந்து தப்பிக்க கொச்சி பயணிக்கிறது எம்எல்ஏக்கள் குழு
May 17, 2018, 6:59 pm IST
தமிழகத்தில் பல இடங்களில் காங்.போராட்டம்
May 17, 2018, 6:58 pm IST
சென்னை திருவொற்றியூர், தாம்பரத்தில் போராட்டம்
May 17, 2018, 6:58 pm IST
மதுரையில் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
May 17, 2018, 6:58 pm IST
கர்நாடகா ஆளுநர் முடிவைக் கண்டித்து போராட்டம்
May 17, 2018, 6:06 pm IST
மேகலாயாவிலும் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்.
May 17, 2018, 6:06 pm IST
ஆளுநரை நாளை சந்திக்கிறார் மணிப்பூர் மாஜி முதல்வர் இபோபி சின்
May 17, 2018, 5:59 pm IST
மணிப்பூரிலும் காங்கிரஸ் போர்க்கொடி
May 17, 2018, 5:58 pm IST
ஆட்சி அமைக்க உரிமை கோர காங். எம்.எல்.ஏக்கள் முடிவு
May 17, 2018, 5:49 pm IST
கர்நாடகா ஆளுநரைக் கண்டித்து நாடு முழுவதும் காங். போராட்டம்
May 17, 2018, 5:49 pm IST
நாடு முழுவதும் நாளை மாநில, மாவட்ட தலைநகரங்களில் காங். போராட்டம்
May 17, 2018, 5:49 pm IST
மாநில கமிட்டிகளுக்கு காங். மேலிடம் உத்தரவு
May 17, 2018, 5:32 pm IST
கர்நாடகத்தில் ஜூன் 11-இல் ஜெயநகர் தொகுதிக்கு வாக்குப் பதிவு
May 17, 2018, 5:26 pm IST
ஜூன் 16-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
May 17, 2018, 5:25 pm IST
ஜெயநகர் தொகுதியின் வேட்பாளர் விஜயகுமார் இறந்ததால் மே 12-இல் தேர்தல் நடத்தவில்லை
May 17, 2018, 5:12 pm IST
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் போலீஸ் வாபஸ்
May 17, 2018, 5:12 pm IST
எடியூரப்பா உத்தரவையடுத்து பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் திடீர் வாபஸ்
எடியூரப்பாவுடன் மேலும் சிலரும் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு
8:49 AM, 17 May
வந்தே மாதரம், மோடி வாழ்க என கோஷம்
#WATCH BJP workers chant slogans of 'Vande Mataram and Modi, Modi' outside Raj Bhavan in Bengaluru, as oath taking ceremony of BS Yeddyurappa as Karnataka CM to is set to begin shortly pic.twitter.com/npZthZbqZd