பெங்களூரில் மேலும் ஒரு பள்ளி மாணவர் பலாத்காரம்: ஆசிரியர் கைது
பெங்களூரு: பெங்களூருவில் உயர்நிலைப் பள்ளிச் சிறுவன் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில், 28 வயது ஆசிரியர் ஒருவரை, ராமநகர் போலீஸார் கைது செய்தனர்.
தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 6 மாதங்களாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அலெக்ஸ் ஆன்டனி சுவாமி.
உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் பள்ளியிலேயே சிறப்பு வகுப்புகள் நடப்பது வழக்கம். சில நேரங்களில், மாணவர்கள் இரவில் தூங்கிவிட்டு, அதிகாலை வீடு திரும்புவதும் நடக்கும்.
அதேபோல், வியாழக்கிழமை இரவு தங்கிய சிறுவனை ஆசிரியர் ஆன்டனி சுவாமி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபற்றிய தகவலை, தமது பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுவன் விவரித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியரின் வீட்டை முற்றுகையிட்ட மாணவனின் பெற்றோரும், உறவினர்களும், சுவாமியை கட்டிப் போட்டு அடித்த பிறகு, போலீஸிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, சிறார் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சுவாமி மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, பெங்களூரில் 6 வயது மாணவி பள்ளி ஊழியர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது அந்த சுவடு மறைவதற்குள் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications