பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ஷார்ஜாவுக்கு பிரசித்தி பெற்ற பனார்சி லாங்டா மாம்பழங்கள் நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்கு முன்னர் மாம்பழங்களின் தரத்தை யோகி ஆதித்யநாத் பரிசோதித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாடு வளர்ச்சி மற்றும் செழுமையின் புதிய உயரங்களை எட்டி வருகிறது. தற்போது விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஆனால் இதற்கு பின்னால் பிரதமர் பசல் யோஜ்னா (பயிர் காப்பீடு திட்டம்) போன்ற ஏராளமான முயற்சிகள் இருக்கின்றன. வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான வசதிகளை அதிகரிக்க உத்தரப் பிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் வாரணாசியில் இருந்து பழங்களின் ஏற்றுமதி தொடங்கியது, ஆனால் மாவட்டத்தில் அப்போது பேக் ஹவுஸ் இல்லை. ஆனால் பெரும் முயற்சிக்கு பின்னர் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் வாரணாசி, லக்னோ, சஹாரன்பூர் மற்றும் அம்ரோஹா ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த பேக் ஹவுஸ்கள் கட்டப்பட்டன. இந்த பேக் ஹவுஸ் இருப்பதால்தான் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகிறது.
தற்போது உத்தரப் பிரதேசத்தில் இருந்து ₹ 19000 கோடி மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம். விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு. எனவே இதை பாதுகாப்பதில் பாஜக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. இனி வரும் காலங்களில் விவசாயிகளின் வருமானம் மேலும் அதிகரிக்கும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications