சாதி மாறி காதல்.. பழங்குடி பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் அடித்து உதைத்த ஊர் மக்கள்.. அதிர்ச்சி வீடியோ
இளம்பெண்ணை அடித்து உதைத்து இழுத்து சென்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது
Recommended Video
போபால்: இளம்பெண்ணின் சேலையை உருவி அரை நிர்வாண கோலத்தில் அடித்து உதைக்கும் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம், அலிராஜ்பூர் பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்து இளம்பெண் அவர். வேறு சாதி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.

வீட்டில் எப்படியும் தங்கள் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், காதலர்கள் ஊரைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால்தான் விஷயம் அறிந்த ஊர்மக்கள், அந்த பெண்ணை இழுத்து வந்து அடித்து உதைத்துள்ளனர்.
பெண்ணின் சேலையை உருவி அடித்தனர்.. அரை நிர்வாண கோலத்துடனேயே ஊருக்குள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். வெறும் பிளவுஸ், பாவாடை அணிந்தவாறு வழியெங்கும் குச்சியால் கண்மூடித்தனமாக அடித்து அழைத்து வருகிறார்கள்.
இது சம்பந்தமான வீடியோவும் வாட்ஸ்அப்பில் பரவி உள்ளது. ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. ஆனால் ஒருவரும் இதை பற்றி புகார் அளிக்க முன்வரவில்லை.
எனினும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண் யார் சம்பந்தப்பட்ட பிஹாலா சமூகத்தை சேர்ந்தவர் என்றும், இளைஞர் பீல் எனும் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
ஆனால் தாக்கப்பட்ட பெண்ணின் முழு விவரம் தெரியவில்லை என்றும், இது சம்பந்தமான தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications