"அது".. அத்தைக்கு தெரிஞ்சுருச்சே.. பிளான் போட்ட மருமகள்.. பதற வைத்த படுகொலை.. சிக்கிய 3 பேர்

மாமியாரை பாம்பை கடிக்க வைத்து கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: தன்னுடைய கள்ளக்காதல் விவகாரம் மாமியாருக்கு தெரிந்துவிட்டது.. அதனால் வித்தியாசமான முறையில் மாமியாரை கொன்ற மருமகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. சச்னி - அல்பனா தம்பதி இந்த கிராமத்தில் வசித்து வந்தனர்.. இவர்களுக்கு 2018-ம் வருஷம் கல்யாணம் ஆனது.

சச்சின் ராணுவத்தில் வேலை பார்க்கிறார்.. கல்யாணம் ஆன சில நாட்களில் பணிக்கு கிளம்பி சென்றுவிட்டார். அதனால், அல்பனாவும் சச்சினின் அம்மா சுபோத் தேவியும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

இந்நிலையில் அல்பனாவுக்கு அதேபகுதியை சேர்ந்த மணீஷ் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.. அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்தனர்.. மேலும் நிறைய இடங்களுக்கு சென்று இருவரும் ஜாலியாக இருந்து விட்டும் வந்துள்ளனர்.

அட்வைஸ்

அட்வைஸ்

இந்த விஷயம் மாமியாருக்கு தெரிந்துவிட்டது. அதனால் அல்பனாவை கண்டித்தார்.. ஆனால் கள்ளக்காதலை பிரிக்கவே முடியவில்லை.. தொடர்ந்து அட்வைஸ் பண்ணி கொண்டே இருந்த மாமியாரை கண்டு அல்பனாவுக்கு எரிச்சலாக இருந்தது.. அதனால் மாமியாரை கொலை செய்யலாம் என்று முடிவு செய்தார். இதற்கான ஐடியாவை கள்ளக்காதலனிடம் கேட்டார்.

விஷப்பாம்பு

விஷப்பாம்பு

நாம சேர்ந்து கொன்றால் போலீசில் மாட்டிக் கொள்வோம்.. அதனால் பாம்பை விட்டு மாமியாரை கடிக்க வைத்து கொன்றுவிடலாம்.. நம்ம மேல சந்தேகம் வராது.. பாம்பு கடித்து இறந்துவிட்டதாக நம்ப வைக்கலாம் என்று முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஜுன் மாதம் 2-ம் தேதி ஒரு விஷப்பாம்பை வரவழைத்து கொண்டு வந்தனர்.. மாமியார் வீட்டிற்குள் தனியாக இருந்தபோது, பாம்பை உள்ளே விட்டனர்.. அதன்படியே அந்த பாம்பு மாமியாரை கொத்தி கொன்றுவிட்டது.

நடவடிக்கை

நடவடிக்கை

மாமியார் இறந்த பிறகு அல்பனாவுக்கு ஒரே குஷி.. வழக்கத்துக்கு மாறாக சந்தோஷத்தில் குதித்து கொண்டிருந்தார்.. இதை பார்த்த உறவினர்களுக்கு டவுட் வந்துவிட்டது.. மாமியார் இறந்த அடுத்த சில தினங்களிலேயே அல்பனாவின் நடவடிக்கை குறித்து போலீசில் புகார் தந்தனர்.. மேலும் கள்ளக்காதலன் மணீஷின் பற்றி எசகுபிசகாக கேள்விப்பட்ட தகவல்களையும், மணீஷின் போன் நம்பரையும் தந்தனர்.

மெசேஜ்கள்

மெசேஜ்கள்

அதன்படி போலீசாரும் மாமியார் இறந்த தினத்தன்று 2 பேரின் செல்போன் நம்பர்களையும் டிரேஸ் செய்து பார்த்தனர். அன்றைய ஒரே நாள் 124 முறை இந்த கள்ளக்காதலர்கள் போனில் பேசி வைத்திருக்கிறார்கள்.. இது போக மெசேஜ்களும் நடந்துள்ளன.. இந்த விவரத்தை கொண்டு 2 பேரையும் அழைத்து போலீசார் விசாரித்தபோதுதான், மாமியாரை கொன்றதை ஒப்புக் கொண்டனர்... இறுதியில் கள்ளக்காதல் ஜோடியுடன், பாம்பு கொடுத்து உதவிய நண்பர் கிருஷ்ண குமாரையும் சேர்த்து உள்ளே வைத்தது போலீஸ்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+