தொடரும் ஒருதலைக் காதல் வெறி.. கோவை பெண் கொலை.. கொன்றவர் கேரளாவில் தற்கொலை முயற்சி!
பாலக்காடு: ஒரு தலைக் காதலால் கோவையைச் சேர்ந்த இளம்பெண் தன்யாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கேரளாவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் தென்னம்பாளையம் சாலை டெய்லர் சோமுவின் மகள் தன்யா. இவர் பொங்கலூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
தன்யாவை அவரது பக்கத்து வீட்டில் தங்கி பேக்கரியில் வேலை பார்த்து வந்த சகீர் என்ற கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் சகீரின் காதலை தன்யா ஏற்க மறுத்துவிட்டார்

திருமண முயற்சி
ஆனாலும் சகீர் விடாப்பிடியாக தன்யாவை ஒருதலையாக காதலித்து வந்தார். இதனால் சகீரை தன்யாவின் பெற்றோரும் கண்டித்துள்ளனர். அத்துடன் தன்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.

கத்தியால் குத்தி கொலை
இதை அறிந்த சகீர், நேற்று தன்யா வீட்டில் தனியாக இருந்த போது அவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். இதனிடையே சகீரை போலீசார் தேடி வந்தனர்.

கேரளாவில் தற்கொலை முயற்சி
அப்போதுதான் கேரளாவுக்கு தப்பி ஓடிய சகீர் பாலக்காட்டில் உள்ள தமது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ஆனால் சகீரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடரும் விபரீதம்
இதைத் தொடர்ந்து பாலக்காடு விரைந்த கோவை போலீசார் சகீரை கைது செய்ய உள்ளனர். சென்னை சுவாதி, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா வரிசையில் ஒருதலைக் காதலால் கோவை தன்யாவும் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications