மரக்கிளை விழுந்து பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க சென்ற வாலிபர் சாவு
பெங்களூர்: வாக்களிக்க சென்ற 22 வயது வாலிபர் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பரிதாபமாக பலியான சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் மாநகராட்சியின் 197 (மொத்தம் 198 வார்டுகள்) வார்டுகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடக்கிறது.

மழை காரணமாக காலையில் மந்த கதியில் வாக்குப்பதிவு இருந்தது. ஆனால், அந்த நிலையிலும் ஓட்டுபோட ஒரு வாலிபர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பெங்களூரின் மையப்பகுதியான சிவாஜிநகரின் வார்டு எண் 92க்கான வாக்குச்சாவடியில் வாக்களிக்க இன்று காலை 9 மணியளவில் பையாஸ் என்ற 22 வாலிபர் சென்றார். அவர் வாக்குச்சாவடி அருகே சென்றபோது, மரத்தில் இருந்து முறிந்து விழுந்த மரக்கிளை அவரது தலையில் பாய்ந்தது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை, அருகில் இருந்தோர் பவுரிங் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தலைக்குள் மரக்கட்டை புகுந்துவிட்டதால், பையாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை தொடங்கி விடியவிடிய பெய்த மழை காரணமாக மரக்கிளை உடைபட்டு இருந்துள்ளது. அதை வெட்டி வீழ்த்தாமல் மாநகராட்சி ஊழியர்கள் மெத்தனம் காட்டியது ஒரு வாலிபரின் உயிரை பறித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications