லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து.. "அதை" மட்டும் எடுத்து டார் டாரென கிழித்து..இப்ப சார் கம்பி எண்ணுறார்
பெண்களின் உள்ளாடைகளை கிழித்து வந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்
போபால்: பெண்களின் உள்ளாடைகளை பார்த்தாலே ஒரு மாதிரி ஆகிவிடுவார் ஸ்ரீகாந்த்.. இவர் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.. மத்தியப்பிரதேச மாநிலத்தில் இப்படி ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் அருகே விஜய் நகர் என்ற பகுதி உள்ளது.. இங்கு லேடீஸ் ஹாஸ்டல்கள், நிறைய உள்ளன.. அதேபோல, ஹாஸ்டலில் வசிக்க விரும்பாத பெண்கள், தனியாக பிளாட்களில் தோழிகளுடன் வசித்தும் வருகிறார்கள்.

இந்த ஹாஸ்டல்கள், பிளாட்களுக்குள் ஒரு மர்ம நபர் அடிக்கடி உள்ளே நுழைந்து செல்வது போல தெரிந்தது.. அவர் யார் என தெரியவில்லை.
யாருமே இல்லாத நேரம் பார்த்து, இந்த பெண்களின் ரூமுக்குள் நுழைவாராம்.. அங்கே பீரோ, சூட்கேஸ்களில் இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் தேடி தேடி எடுப்பாராம்.. பிறக அதை எடுத்து டார்.. டாராக கிழித்து எறிந்துவிட்டு போய்விடுவாராம்.. இப்படி தங்களின் உள்ளாடைகள் பல கிழிந்து வருவதை அறிந்த பெண்கள், உடனடியாக போலீசில் புகார் தந்தனர்.. அப்போதும் அந்த மர்ம நபரை பிடிக்க முடியவில்லை. .
அவரை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதற்காக போலீசார் அந்த பகுதியின் பல இடங்களில் சோதனையை பலப்படுத்தினர்.. இதனிடையே, அந்த நபர், மறுபடியும் லேடீஸ் ஹாஸ்டல் பக்கம் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.. அதனால் இரவெல்லாம் அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டவாறே இருந்தனர்.
இந்நிலையில், அந்த நபர் பெண்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில் நுழைந்ததாக கூறி, மறுபடியும் போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், உடனடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்... அந்த நபரை மடக்கி பிடித்தனர்.. அவர் பெயர் ஸ்ரீகாந்த்.. 26 வயதாகிறது.. செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.
இதுபோல தனியாக பெண்கள் இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து, அவர்களிடம் தவறாக நடக்கவும் எற்கனவே முயன்றிருக்கிறார்,.. அது சம்பந்தமான புகாரும் போலீசில் பதிவாகி இருந்தது.. இவ்வளவு நாள் இவரை தான் தேடி கொண்டிருந்த நிலையில், பெண்களின் உள்ளாடை விஷயத்தில் இப்போது சிக்கி உள்ளார்.
ஆனால் எதற்காக ஸ்ரீகாந்த் உள்ளாடைகளை குறி வைத்து தேடி போகிறார்? ஏன் அவைகளை கிழித்து எறிகிறார் என காரணம் தெரியவில்லை.. அது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.. இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தி விட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications