நண்பரிடம் பைக் வாங்கி..காதலியுடன் உல்லாச பயணம்..இணையத்தில் பரவிய வீடியோ..போலீஸ் செய்த செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ராய்பூர்: சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் ஸ்கூட்டி பைக்கில் இளம்பெண்ணை முன்பக்கமாக தனது மடியில் அமர வைத்த படி இளைஞர் ஒருவர் சாலையில் சென்றது பார்ப்பவர்கள் முகம் சுளிக்க வைத்தது. இந்த நிலையில் அந்த இளைஞர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

காதல் ஜோடி என்ற பெயரில் இப்போதுள்ள சில 2 கே கிட்ஸ்கள் வரம்பு மீறி பொது இடங்களில் நடந்து கொள்வது பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. பீச், பார்க், தியேட்டர் மட்டும் இல்லாமல் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே நிலையங்கள் போன்ற பொது இடங்களில் கூட காதல் ஜோடிகள் சிலர் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது.

Youth man romantic ride with girl friend in a scooty caught by police in chattisgarh

அதுவும் சிலர் சமூக வலைத்தளங்களில் லைக்குகள் வாங்குவதற்காகவும் நண்பர்களிடம் கெத்து காட்டவும் சில இளசுகள் தற்போது வித்தியாசமாக ஏதாவது செய்துவிட்டு பின் வசமாக போலீசிடம் சிக்கி வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அதுபோலத்தான் சத்தீஷ்கரில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் உள்ள இம்பலிரா சாலையில் கடந்த புதன் கிழமை அதிகாலை 2 மணியளவில் இளம் காதல் ஜோடி ஒன்று ஸ்கூட்டி பைக்கில் சிட்டாக பறந்து கொண்டிருந்தது. அதுவும் இளம்பெண்ணை முன்பக்கமாக தனது மடியில் அமர வைத்த படி பார்ப்பவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் சாலையில் இந்த இளைஞர் பைக்கை ஓட்டி சென்றார்.

Youth man romantic ride with girl friend in a scooty caught by police in chattisgarh

சாலை விதிகளை காற்றில் பறக்க விட்ட படி, இப்படி சாலையில் உல்லாச பயணத்தை இந்த ஜோடி மேற்கொண்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இது போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இதன்பிறகு ஸ்கூட்டி வாகனத்தின் எண்ணை வைத்து அந்த வண்டியின் உரிமையாளரை போலீசார் பிடித்தனர்.

அப்போது, தன்னிடம் பைக்கை வாங்கி கொண்டு சென்ற ஹர்ஷ் திவாரி தான் இது என்றும் நான் பைக்கை ஓட்டவில்லை எனவும் அந்த நபர் கூறினார். இதன்பேரில் ஹர்ஷ் திவாரியை பிடித்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், 19-வயதே ஆன ஹர்ஷ் திவாரி கல்லூரியில் படித்து வருவதாககவும் போட்டித்தேர்வுகளுக்கு தயராகி வருவதாகவும் கூறினார்.

Youth man romantic ride with girl friend in a scooty caught by police in chattisgarh

இதையடுத்து, மோட்டார் வாகன விதிகளை மீறியதாக ஹரிஷ் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், அவருக்கு 8,800 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும் வரும் காலத்தில் இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்றும் மன்னிப்பு கோரி ஹர்ஷ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹர்ஷ் திவாரியுடன் உல்லாச பயணம் மேற்கொண்ட அந்த இளம்பெண்ணை விசாரணைக்கு அழைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+