உ.பி.யில் பயங்கரம்: சிகரெட் தர மறுத்த வாலிபர் சுட்டுக் கொலை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சிகரெட் தர மறுத்த வாலிபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் சியானி கேட் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல்(25). கடந்த 1ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு பேர் காசியாபாத் சென்று கொண்டிருந்தனர். வழியில் நிர்மலை பார்த்த அவர்கள் தங்களுக்கு சிகரெட் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் நிர்மல் சிகரெட் தர மறுத்துவிட்டார்.
இதனால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து பிரதீப் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து நிர்மலை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அப்பகுதி மக்கள் நிர்மலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீப் மற்றும் ராகுலை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசார் அந்த இரண்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு சிகரெட்டுக்காக வாலிபர் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications