பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி..சிக்கிய ’சென்னை’ யூட்யூபர்.. இவரா? மாஸ்டர் ப்ளான் போட்ட மல்ஹோத்ரா!
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு யூட்யூப் சேனல்களை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டதாக ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூட்யூபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோதி மல்ஹோத்ராவுடன் பங்கேற்ற சென்னையில் படித்த யூட்யூபர் ஒருவர் தொடர்பாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ஆதரவு வீடியோக்கள் வெளியான நிலையில் அவற்றை உளவு பிரிவினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். குறிப்பாக ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற இளம் பெண் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி சென்று வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது வாட்ஸாப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளை ரகசியமாக கண்காணித்த போது பாகிஸ்தான் உளவு அமைப்பினுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்த அவர் அதனை யூட்யூபில் வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத்தலங்கள், பாதுகாப்பு தொடர்பான இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்து அது தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்காக அவர் பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜோதி மல்ஹோத்ரா மூலம் இந்தியாவைச் சேர்ந்த பல பிரபலமான யூடியூபர்களை பாகிஸ்தான் வளைத்துப் போட்டு அவர்களை உளவாளிகளாக செயல்பட வைத்ததும், அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி ஒன்றை நடத்தி அதில் ஏராளமான யூடியூபர்களை பங்கேற்க வைத்திருக்கிறது பாகிஸ்தான்.
ஜோதி மல்கோத்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரியங்கா சேனாபதி உள்ளிட்டோர் சிக்கி இருக்கின்றனர். தொடர்ந்து ஜோதி மல்கோத்ராவிடம் விசாரித்த போது கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரின் பகல்காம் தாக்குதல் நடந்த பகுதிக்கு சுற்றுலா சென்றதும் அதற்குப் பிறகு அவர் பாகிஸ்தானுக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. மேலும் பகல் கம் தாக்குதலுக்கு முன்பாக அவரது சேனலில் சில வீடியோக்களும் இடம் பெற்ற நிலையில் அவரது பயணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு போட்டு பகுதிக்கும் ஜோதி மல்ஹோத்ரா சென்றதும் சில சீன உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யாத்ரி டாக்டர் என்ற சேனலை நடத்தி வரும் நவ்ஹர் சவுத்ரி பக்கமும் உளவுத்துறையின் பார்வை திரும்பி இருக்கிறது. டெல்லியில் உள்ள பாக் தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜோதி மல்ஹோத்ராவுடன் யாத்ரி டாக்டர் நவ்ஹர் சவுத்ரி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அரியானாவைச் சேர்ந்த இவர் 2015ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றதாகவும், தற்போது டெல்லியில் வசிப்பதாக கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு மருத்துவர் பணியை விட்ட அவர் யாத்ரி டாக்டர் என்ற சேனலை தொடங்கி பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அதனை யூட்யூப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
20 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவரது சேனலில் 144 நாடுகளின் சுற்றுலா வீடியோக்கள் இருக்கிறது. ஜோதியுடன் நஹ்கர் சவுத்ரி நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்ததோடு பாகிஸ்தானுக்கும் சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியா உளவுத்துறை அதிகாரிகள் அவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தான் அயர்லாந்தில் இருப்பதாகவும், என்னைப்பற்றி எதிர்மறையான செய்திகள் பரப்பப்படும் நிலையில் நான் எந்த தவறும் செய்யவில்லை, பாகிஸ்தானுக்கு ஒருமுறை மட்டுமே சென்றிருக்கிறேன். ஜோதி மல்கோத்ராவின் ரகசிய பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆதாரம் இருந்தால் நான் தவறு செய்திருந்தால் என்னை கைது செய்யலாம். விசாரணை அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என வீடியோ வெளியிட்டுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications