ஏர் இந்தியா அதிகாரியின் கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஆர் காங். எம்.பி - கிரிமினல் வழக்கு பதிவு
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்பி, ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னத்தில் அறைந்த எம்.பி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அங்கு, வெள்ள சேதங்களை பார்வையிட ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வந்தார். அவரை வழியனுப்புவதற்காக கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை தொகுதி எம்.பி. மிதுன்ரெட்டி திருப்பதி விமான நிலையத்திற்கு வந்தார்.

அவரை வழியனுப்பிவிட்டு, அங்கிருந்து தனது உறவினர்களுடன் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் மிதுன்ரெட்டி. விமானம் புறப்படுவதுற்கு 45 நிமிடம் முன்பு போர்டிங் கவுண்டர்கள் மூடப்படும். இவர் சற்று தாமதமாக சென்றதால், கவுண்டர் மூடப்பட்டு டெல்லி செல்ல போர்டிங் பாஸ் கிடைக்கவில்லை.
இதனால், அவர் ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ராஜசேகர் என்பவரை சந்தித்து தனக்கும், தனது உறவினர்களுக்கும் விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் ராஜசேகரோ நேரம் முடிந்து விட்டது. எதுவும் செய்ய முடியாது என்று கூறவே, கோபமடைந்த எம்பி, ராஜசேகரின் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தினர்.
எனினும் தன்னை அடித்த எம்.பி பற்றி எர்பேடு காவல் நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவன அதிகாரி புகார் அளித்தார். இதனையடுத்து பொது இடத்தில் தாக்கி, வன்முறையில் ஈடுபட்ட எம்.பி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல ஏர் இந்தியா மேனேஜரை தாக்கியதை நேரில் பார்த்த சில பயணிகளும் எம்.பியின் மீது புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications