இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊடுருவி மீன்பிடித்த 6 சிங்களர் கைது- சிறையில் அடைப்பு
காரைக்கால்: இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊடுருவி மீன்பிடித்த 6 சிங்கள மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருவது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையினரோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என குற்றம்சாட்டி 800க்கும் அதிகமானோரை படுகொலை செய்துள்ளனர். இந்த அட்டூழியம் இப்போதும் தொடருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்வதும் அவர்களை சிறையில் அடைப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடருகிறது.

இந்த நிலையில் காரைக்கால் இந்திய கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இந்திய எல்லைப் பகுதியில் விசைபடகு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த படகில் வந்த 6பேரிடமும் கடலோர காவற்படையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் 6 பேரும் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்துக்கு இன்று அழைத்து வந்தனர்.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், இலங்கை திருகோணமலையை சேர்ந்த அனுரா என்பவருக்குச் சொந்தமான விசை படகில் கடந்த 21-ந் தேதி திருகோணமலையில் இருந்து மீன் பிடிக்க வந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 6 பேரும் சிங்களர் என்பது தெரியவந்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications