இஸ்ரேல்:14 அமெரிக்கர் உட்பட 1,000 பேர் படுகொலை- யூதர்கள் அழித்தொழிப்பு:ஜோ பிடன் ஆவேசம்- 11பாயிண்ட்ஸ்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 14 அமெரிக்கர்கள் உட்பட 1,000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; இஸ்ரேலில் யூதர்களை இலக்கு வைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் அழித்தொழித்துள்ளனர் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஆவேசமாகவும் குமுறலமாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான பாலஸ்தீன ஹமாஸ் ஜிஹாதிகளின் பெருந்தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா மக்களுக்கு ஜோ பைடன் ஆற்றிய உரையின் முக்கிய 11 பாயிண்டுகள்:
- அமெரிக்கா இஸ்ரேல் பக்கம் நிற்கிறது. இஸ்ரேல் தமது நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிமை உண்டு.

- பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது; மன்னிக்கவும் முடியாது. பாலஸ்தீன மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகவோ, பாலஸ்தீனர்களின் உரிமைக்காக போராடாதவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகள். இஸ்ரேல் என்ற நாட்டையும் யூத மக்களையும் அழித்தொழிப்பதை இலக்காகக் கொண்டே ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
- பாலஸ்தீன மக்களை மனித கேடயங்களாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தினர். இத்தாக்குதலில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சை பிளக்கச் செய்கிறது. இஸ்ரேல் இதற்கு தக்க பதிலடி தருவதற்கு முழு உரிமை உண்டு.
- இஸ்ரேலில் குடும்பம் குடும்பமாக படுகொலை செய்யப்பட்டனர். அமைதியான முறையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். யூதர்களைக் கொல்ல வேண்டும் என்ற வெறித்தனத்துடன் ஹமாஸ் பயங்கரவாதிகள் இப்படுகொலைகளை நிகழ்த்தி உள்ளனர்.
- 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 14 அமெரிக்கர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க நாட்டவர்களும் ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக சிக்கி இருக்கின்றனர்.
- இஸ்ரேலுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் உளவு தகவல்களை பரிமாற வழிகாட்டப்பட்டுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பதற்காக கூடுதல் படை குவிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
- பிணைக் கைதிகளாக இருக்கும் அமெரிக்கர்களை மீட்பதைத் தவிர வேறு எந்த முன்னுரிமையும் எங்களுக்கு இப்போது இல்லை. அமெரிக்காவின் தாக்குதல் படையணி மத்திய தரைக் கடல் பகுதிக்கு விரைந்துள்ளது. எங்களது போர் விமானங்கள் அங்கு முகாமிட்டுள்ளன. தேவைப்பட்டால் களமிறங்க அமெரிக்க படைகள் தயாராக உள்ளன.
- இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிமிடம் முதல் நானும் எமது குழுவும் தொடர்ந்து இஸ்ரேலுடன் தொடர்பில் இருக்கிறோம். அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் போது இஸ்ரேலுக்கான கூடுதல் நிதி உதவிக்கு ஒப்புதல் பெறப்படும். இது ஒரு கட்சி பிரச்சனை, அரசியல் பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த உலகத்தின் பாதுகாப்பு தொடர்பானது; அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பானது.
- எந்த ஒரு நாடும், எந்த ஒரு இயக்கமும் தற்போதைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கவே கூடாது; அதை செய்யவும் கூடாது.
- பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து நாட்டு தலைவர்களுடன் உரையாடி இருக்கிறேன். அமெரிக்காவிலும் யூதர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
- அமெரிக்காவில் வெறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. யூதர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ எதிராகவோ யாரு யாருக்கும் எதிராகவோ செயல்படக் கூடாது. நாங்கள் இதை நிராகரிக்கிறோம். இந்த வெறுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா நிராகரிக்கிறது. நாங்கள் பயங்கரவாதத்தை நிராகரிக்கிறோம்.இவ்வாறு ஜோ பைடன் உரையாற்றினார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications