பாகிஸ்தானில் உணவின்றி ஊசலாடும் 1 கோடி பேர்.. இந்தியாவுடனான மோதலுக்கு நடுவே உலக வங்கி வார்னிங்
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனா மோதலுக்கு நடுவே பாகிஸ்தானில் இந்த ஆண்டு ஒரு கோடி பேர் உணவின்றி தவிக்கலாம் என்று உலக வங்கி வார்னிங் செய்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலுக்கு நடுவே தரப்பட்டுள்ள இந்த வார்னிங்கின் பின்னணி பற்றி பார்க்கலாம்.
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது லஷ்கர் இ தொய்பாவின் அமைப்பின் துணை அமைப்பாகும்.

இந்த தாக்குதலால் தற்போது இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே தான் பயங்கரவாத தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக பயங்கரவாத தாக்குதலை நடத்திவிட்டு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் நாடகமாடுவது வழக்கமான ஒன்று தான். அதனை தான் இந்த முறையும் பாகிஸ்தான் செய்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியை நம் நாடும் கொடுத்து வருகிறது. முதற்கட்டமாக நம் நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றி வருகிறது. சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா திட்டத்தை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதையடுத்து விரைவில் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுக்க உள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை சிந்து நதி நீர் என்பது தான் உயிர் நாடியாகும். 21 கோடி மக்கள் அந்த தண்ணீரை நம்பி தான் உள்ளனர்.
இதற்கிடையே தான் நம் நாடு சிந்து நதி நீரை நிறுத்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இது பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மாற உள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் முஷ்டி முறுக்கி கொண்டு நம் நாட்டுடன் மோத தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை குவிப்பதோடு, துப்பாக்கிச்சூடும் நடத்தி வருகிறது. இதற்கு நம் நாட்டு வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். விரைவில் பாகிஸ்தான் படை வீரர்கள் ஓடஓட விரட்டியடிக்கப்படுவது உறுதி.
இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தானுக்கு உலக வங்கி முக்கிய வார்னிங்கை செய்துள்ளது. அதாவது இந்த நிதி ஆண்டில் பாகிஸ்தானில் ஒரு கோடி பேருக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி சார்பில், ‛‛பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி என்பது 2.7 என்ற சதவீதத்துக்கு சரியும். நாட்டின் நிலையற்ற தன்மை தான் இதற்கு காரணம். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் என்பது வருவாய் பற்றாக்கறையுடன் தான் இருக்கம். அதேபோல் நாட்டின் கடன் என்பது உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது.
காலநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். அரிசி, கோதுமை உற்பத்தி என்பது பெரிதும் பாதிக்கப்படும். இதனால் பாகிஸ்தானில் இந்த நிதியாண்டில் ஒரு கோடி பேருக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும். இது நாட்டில் நிலவும் வறுமையை இன்னும் அதிகப்படுத்தும். வேலைவாய்ப்பின்மை என்பது ஏற்படும். கூலிகள் குறையும்'' என்று எச்சரித்துள்ளது. ஆனாலும் கூட பாகிஸ்தான் அதனை எல்லாம் பற்றி கவலைப்படாமல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நிதி ஒதுக்கீடு செய்து எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதலை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications