வீட்டு பாடம் எழுத சொன்னது குத்தமா? 10 வயது சிறுவன் செய்த சம்பவம்.. அப்பாவை ஜெயிலில் தள்ளிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் வீட்டு பாடம் எழுத சொல்லி திட்டிய தந்தைக்கு தனது வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனையை 10 வயது சிறுவன் கொடுத்துள்ளார். விளையாட்டாக போலீசுக்கு போன் போட்டு சிறுவன் சொன்ன தகவல் அவரது தந்தையை சிறையில் தள்ளியுள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

பொதுவாக நாம் சிறுவர், சிறுமிகளாக இருக்கும்போது வீட்டு பாடம் செய்யவில்லை என்று நம் பெற்றோர் திட்டினால் என்ன செய்வோம்? ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் வீட்டில் கோபப்பட்டு நமக்கு நெருக்கமானவரின் வீட்டுக்கு செல்வோம்.

china international

இல்லாவிட்டால் நமக்கு அதிக செல்லம் தரும் வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி உள்ளிட்ட உறவினர்களிடம் பெற்றோரை போட்டு கொடுத்து வீட்டு பாடம் எழுதாமல் சில மணிநேரம் தப்பிப்போம். ஆனால் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வீட்டு பாடம் எழுத சொல்லி திட்டிய தந்தையை 10 வயது சிறுவன் போலீசில் போட்டு கொடுத்ததும், சிறுவன் சொன்ன தகவலின் அடிப்படையில் போலீசார் வீட்டை சோதனை செய்து அவரது தந்தையை பிடித்து சிறையில் அடைத்த சம்பவமும் நடந்துள்ளது. அப்படி போலீசில் சிறுவன் என்ன சொன்னான்? போலீஸ் ஏன் சிறுவனின் தந்தையை பிடித்து சிறையில் அடைத்தது? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சீனாவில் யோங்னிங் கவுண்டியை சேர்ந்தவன் 10 வயது சிறுவன். இவன் சிறுவயதிலேயே பயங்கர சுட்டியாக இருந்து வருகிறான். பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தால் சிறுவனை வீட்டு பாடம் முடிக்க வைப்பதிலேயே அவரது பெற்றோருக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். கடந்த 9 ம் தேதி சிறுவன் வீட்டு பாடத்தை சரியான நேரத்தில் முடிக்கவில்லை. இதனால் சிறுவனை அவரது தந்தை திட்டினார்.

வீட்டு பாடத்தை முடிக்காமல் வேறு எங்கும் செல்லக்கூடாது. வீட்டு பாடம் முடித்தால் மட்டுமே தூங்கவும் முடியும் என்று திட்டியுள்ளார். அதன்பிறகு சிறுவனை வீட்டு பக்கத்துக்கு அறைக்கு தந்தை சென்றார். இந்த நேரத்தில் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்த சிறுவன் அருகே உள்ள கடைக்கு சென்று மூச்சு வாங்கியபடி கடைக்காரரிடம் செல்போன் கேட்டுள்ளார். வேகமாக ஓடிவந்து சிறுவன் மூச்சு வாங்குவதை பார்த்த கடைக்காரர் ஏதோ அவசரம் போல என்று நினைத்து செல்போனை கொடுத்தார்.

செல்போனை வாங்கி சற்று தொலைவுக்கு சென்ற சிறுவன் போலீசுக்கு போன் செய்து பேசினார். ‛‛எனது தந்தை வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்துள்ளார். இப்போது வீட்டுக்கு வந்தால் அவரை கைது செய்து விடலாம்'' என்று கூறியதோடு, வீட்டு முகவரியையும் வழங்கி வீட்டுக்கு சென்று அப்பாவியாக ஹோம் வொர்க் செய்ய தொடங்கினான். அடுத்த சில நிமிடங்களிலேயே வீட்டு வாசலில் போலீஸ் போய் நின்றது. போலீசை பார்த்ததும் பதறிப்போன சிறுவனின் தந்தை, ‛‛என்ன சார்.. இங்கே வந்து இருக்கீங்க'' என்று பயம்கலந்து கேட்டார்.

அதற்க போலீஸ், ‛‛உங்கள் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டை சோதனை செய்ய வேண்டும்'' என்று கூறினர். அதை கேட்டு ஷாக்கான சிறுவனின் தந்தை, ‛‛சார் நான் உள்பட எங்கள் வீட்டில் யாரும் போதைப்பொருள் பயன்படுத்துவது இல்லை. வீட்டிலும் போதைப்பொருள் இல்லை'' என்று கூறினார். அப்போது போலீஸ், ‛‛நீங்கள் போதைப்பொருள் வைத்திருப்பதாக உங்களின் மகன் தான் தகவல் தந்தான். கொஞ்சம் வழிவிடுகிறீர்களா? நாங்கள் வீட்டை சோதனை செய்கிறோம்'' என்று கூறவே அதிர்ச்சியில் உறைந்தார் அந்த தந்தை.

வீட்டின் அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து பாப்பி காய்கள் (poppy pods) கிடைத்தன. அதனை கைப்பற்றிய போலீசார் அவரது தந்தையை கைது செய்தனர். போதைப்பொருள் பதுக்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வழக்கு என்பது மாற்றப்பட்டது. மேலும் சிறுவனின் தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் பறிமுதல் செய்த பாப்பி காய் விதைகளில் கோடீன், மார்பின் உள்ளிட்ட ஓபியேட்டுகள் உள்ளன. இந்த விதைகளை பயன்படுத்தி ஓபியம் பாப்பிகளை வளர்க்க முடியும். இது போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர். இப்படி ஹோம் வொர்க் செய்ய சொன்ன தந்தையை போலீசில் போட்டு கொடுத்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறைக்கு அனுப்பி உள்ளான் இந்த 10 வயது சிறுவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+