100 வயதிலும் துணிகளை வெளுத்தெடுக்கும் கொள்ளு பாட்டி ...!!!
நியூயார்க்: அமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்தவர் பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி. இவர் வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு டிரை கிளீனரில் (சலவை நிலையம்) மிகுந்த ஆர்வத்தோடு வேலை செய்து வருகிறார்.
தினமும் காலை 7 மணிக்கு தனது வேலையை தொடங்கும் இவர் மாலை 6 மணி வரை சுறுசுறுப்பாக உழைக்கிறார். ஒரு நாளைக்கு பதினோரு மணிநேரம் உழைக்கும் பெலிமினா இதுகுறித்து பேசும்போது,

இந்த வேலை மிகுந்த மன நிறைவை அளிகிறது. வேலை நேரத்தின் போது வாடிக்கையாளர்களிடம் பேசுவது மனதிற்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. வயது மூப்பின் காரணமாக பெரும்பாலானோர் வீட்டிலேயே தங்களை முடக்கிக் கொள்வார்கள். ஆனால் ஓய்வெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், பலர் தங்களது பணியிலிருந்து சீக்கிரமாகவே ஓய்வு பெறுகின்றனர். எனவே ஓய்வுபெறும் வயதை குறைந்தபட்சம் எழுபத்தைந்தாக மாற்ற வேண்டும் என்றார்.
1915-ஆம் ஆண்டு பிறந்த ரோட்டுண்டோ ஆகஸ்டு மாதம் தனது 100-வது வயதை அடைந்தார். கடந்த 85 வருடங்களாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், 40 வருடங்களாக இந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
தன்னால் இயங்கக் கூடிய நாள் வரை இந்தப் பணியை திறம்பட செய்வேன் என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் ரோட்டுண்டோ.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications