சீனா: சுரங்கத்தில் சிக்கிய 13 தொழிலாளர்கள் – 6 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு
பீஜிங்: சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 13 தொழிலாளர்கள் 140 மணிநேரத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு சீனாவின் குயிழோ மாகாணத்தில் உள்ள ஷிகியான் பகுதியில் நெடுஞ்சாலை சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
வழக்கம்போல், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பணிகள் நடைபெற்று வந்த போது, திடீரென்று அந்த சுரங்கம் இடிந்து விழுந்ததால் அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த 13 பணியாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டனர்.
இடிந்த சுரங்கத்தின் பக்கவாட்டில் சுமார் அரை கிலோ மீட்டர் நீளமுள்ள மாற்றுச் சுரங்கம் தோண்டப்பட்டு, அதன் வழியாக உள்ளே சிக்கிக் கொண்டவர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் உணவு, குடிநீர் ஆகியவற்றை அதிகாரிகள் அளித்தனர்..
டாக்டர்கள் ஆலோசனையின்படி, இவர்களுக்கு உணவாக முட்டை, கஞ்சி, பால், வாழைப்பழம் உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்
சுமார் 140 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்கள் அனைவருமே நல்ல உடல்நிலையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications