மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 7 மாத கர்ப்பிணி உள்பட 14 பேர் பலி, 12 பேர் மாயம்
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள ஜோஹார் மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளனர், 12 பேர் மாயமாகியுள்ளனர்.
மலேசியாவின் கடற்கரை மாநிலமான ஜோஹார் இந்தோனேசியாவின் கடல்வழி எல்லையையொட்டி அமைந்துள்ளது. இதனால் இந்தோனேசியர்கள் பலர் கடல்வழியாக வந்து மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள்.
மலேசியாவில் சுமார் 20 லட்சம் இந்தோனேசியர்கள் சட்டவிரோதமாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் மலேசியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த இந்தோனேசியர்களில் 62 பேர் கடந்த சனிக்கிழமை ஒரு படகில் தங்கள் நாட்டிற்கு கிளம்பினர்.

அப்போது கடலில் ராட்சத அலைகள் எழுந்ததால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வழியாக ரோந்து வந்த கடலோர காவல்படையினர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 பெண்கள், 26 ஆண்களை மீட்டனர்.
மேலும் 14 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். மீட்கப்பட்ட பிரேதங்களில் 7 மாத கர்ப்பிணியும் அடக்கம். இந்த விபத்தில் படகில் இருந்த 12 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜோஹார் கடலில் படகு கவிழ்ந்ததில் 18 இந்தோனேசியர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications