நேபாளத்தில் துயரம்.. பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து.. 14 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாள நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.12க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் சிந்துபல்சௌக் மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்களை ஏற்றுக்கொண்டு களின்சௌக் கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து டோலகா காதிச்சூர்-ஜினி சாலைப் பிரிவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து பள்ளத்தாக்கில் போய் விழுந்தது. இதில் நிகழ்விடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர்.
12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications