"16 வயதினிலே".. திடீர்னு கோர்ட் இப்படி சொல்லிடுச்சே.. ஜெசிந்தாவின் அதிரடி.. மண்டைகாயும் நியூசிலாந்து
நியூசிலாந்து இளைஞர்களின் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைக்க போகிறார்கள்
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் இளைஞர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக மாற்ற அந்நாட்டு பிரதமர் முடிவெடுத்துள்ளார்.
1800களின் இறுதி காலகட்டத்தில் இருந்தே, பெண்களுக்குக் கட்டாயம் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்பதை மற்ற நாடுகளைவிட நியூசிலாந்து நாட்டினர்தான் பல வருடங்களாகவே வலுயுறுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக, கேட் ஷெப்பர்டு என்ற பெண்மணியை இங்கு நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இவர்தான், இதற்கான முதல் மணியை அன்று அடித்தவர்.. உலக நாடுகளில் பெண்கள் என்றாலே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவதை பார்த்து கொந்தளித்தார்.. ஆவேசமாக வெகுண்டெழுந்தார்.

அறைகூவல்
மனிதர்களை பிரிக்கும் இனம், வகுப்பு, பாலினம் என எதுவாக இருந்தாலும் வெற்றி காணப்பட வேண்டும்" என்ற இந்த பெண்ணின் அறைகூவல்தான், அந்நாட்டு மக்களை விழிப்படைய செய்தது.. பெண்களின் வாக்குரிமைக்காக அரசாங்கத்திடம் நேரடியாகவும் மனு தந்தார்.. ஆனால், இதையும் ஒரு கூட்டம் அன்று எதிர்த்தது.. பெண்களின் உலகம் குடும்பம் மட்டுமே என்றுதான் அந்த கூட்டம் எதிர்ப்பை காட்டியது.. ஆனாலும் கேட் ஷெப்பர்டு என்ற இரும்பு பெண்மணி, இந்த விஷயத்தை லேசில் விடலையே..

இரும்பு பெண்
குடும்பத்துக்குள் இருப்பதால் மட்டும் என்ன பயன்? பெண்களுக்கும் வாக்குரிமை தந்தால், குடும்பங்களைப் பாதுகாக்கும் பல கொள்கைகளை அவர்களும் ஆதரித்து அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கிறதே" என்றார்.. இதற்கு பிறகே பெண்களின் வாக்குரிமைக்கு அங்கு ஆதரவு தரப்பட்டது... அதுமட்டுமல்ல, பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை தந்த நாடு நியூசிலாந்து என்ற வரலாற்று முத்திரையும் பொறிக்கப்பட்டுவிட்டது.. இப்போது விஷயத்துக்கு வருவோம்.

ஜெசிந்தா
தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான இந்த நியூசிலாந்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயது என்பது 18 ஆக இருந்து வருகிறது.. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் வயது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்த அந்நாட்டு சுப்ரீம்கோர்ட், 16 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்காதது வயது பாகுபாடு என்று தீர்ப்பளித்தது.. இந்த தீர்ப்பை சில கட்சிகள் வரவேற்றும், சில கட்சிகள் எதிர்த்தும் வருவதால், எந்த ஒரு முடிவையும் எடுக்கமுடியாமல் அந்த நாட்டில் குழப்பம் நிலவுகிறது.. எனவே, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

16 வயதினிலே
அதன்படி, நாடு முழுவதும் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு / தேர்தல் நடத்தப்படும்... இதில், உறுப்பினர்கள் தெரிவிக்கும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்... தனிப்பட்ட முறையில், தேர்தலில் வாக்களிக்கும் வயதை குறைக்கும் நடவடிக்கையை வரவேற்கிறேன். இருந்தாலும், இது நடைமுறைக்கு வர 75 சதவீத உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டியிருக்கறது.. அதனால், வரும் மாதங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

18+ கரெக்ட்
இப்படி ஜெசிந்தா கேட்டுக் கொண்டும்கூட, நியூசிலாந்தின் 2 முக்கிய பழமைவாத எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக பிடிவாதம் பிடித்து வருகின்றன.. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டே இருக்கின்றன.. எதிர்க்கட்சித் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "இதற்கான அவசியம் இப்போது என்ன வந்தது.. இப்படியான முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை.. ஆதரிக்க போவதும் இல்லை.. வாக்களிக்கும் வயது 18ஆக இருப்பதுதான் சரி என்றார்..

16 வயதினில்
ஆக, வாக்களிக்கும் வயது 18 என்றே இருக்கலாமா? அல்லது 16ஆக குறைக்கலாமா" என்பது குறித்து பல நாடுகளும் விவாதத்தில் குதித்து வருகின்றன.. ஆஸ்திரியா, மால்டா, பிரேசில், கியூபா மற்றும் ஈக்வடார் போன்ற நாடுகளில் 16 வயதில் வாக்களிக்க மக்களை அனுமதிக்கின்றன என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டி உள்ளது.. வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக ஜெசிந்தா அறிவித்தாலும்கூட, அதையும் மீறி எதிர்ப்புகள் வெடித்து கிளம்பி கொண்டிருக்கின்றன. உலகிலேயே பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை தந்த நாடு என்ற பெருமையை பெற்றுள்ள நியூஸிலாந்திலேயே இன்னொரு குழப்பமா? என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications